பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னம் வீங்கிற்று 73 நான்கைந்து நாட்கள் ஒடிவிட்டன. ஒருநாள்.மாலை அதே தாடிப் பெரியவர், அடித்த ஆசிரியரும் வேறு இரண் டொருவரும் கூட வர என் வீட்டிற்கு வந்தார். வந்து என்னை அழைத்தார். நான் உள்ளே ஒளிந்துகொண்டேன். அவர் அங்கும் வந்து என்னை இழுத்து அணைத்துக்கொண்டார். நான் ஓவென்று அழுதேவிட்டேன். அவர் என் கண்ணைத் துடைத்துத் தேற்றினர். அம்மா ஏதோ சொல்ல ஆரம்பித் தார்கள். அருகிலிருந்த பாட்டி அம்மாவைப் பேசவேண்டாம் என்று அமர்த்தினர்கள். அம்மா பேச ஆரம்பித்தால் ஏதா வது அதிகமாகப் பேசி அவர்கள் மனத்தைப் புண்படுத்தி விடுவார்களோ என அஞ்சினர்கள். அதையெல்லாம் அறிந்த பெரியார் அவர்கள் தாமே பேச ஆரம்பித்தார்கள். 'அம்மா ! எல்லாம் எனக்குத் தெரியும். பரமசிவம் நல்ல பிள்ளை. இதோ இந்த வாத்தியார் தான் தெரியாது அடித்துவிட் டார். அவரும் இளையவர்; என் தம்பிதான்; ஏதோ எப்படி யோ நடந்துவிட்டது. கன்னம் வீங்கியதை அறிந்தேன்' என்ருர். அப்போது அவர் கை என் கன்னத்தைத் தடவிக் கொடுத்தது. இனிமேல் ஒன்றும் நடக்காது. நான் பார்த் துக்கொள்ளுகிறேன். நாளை பரமசிவத்தை அனுப்புங்கள்' என்ருர் ஆம்! அவர் அன்றும் இன்றும் அன்புகுழையப் பரமசிவம் என்றுதான் அழைப்பார். நான் அம்மா என்ன சொல்வார்களோ என்று அவர்கள் முகம் நோக்கிக் கொண் டிருந்தேன். அவர்கள் முடிவை மாற்ற முடியாதே! என்ரு லும் தன் மகன் படிக்கவேண்டும் என்று ஆசை இராதா? ஆழ்ந்த யோசனையில் இருந்தார்கள். அமைதி நிலவியது. பாட்டி அமைதியைக் கலைத்தார்கள் ! 'ஏன் சும்மா இருக் கிருய். நாளை அனுப்புவதாகச் சொல் எ ன் ரு ர் க ள். அம்மாவும் நாளை அனுப்புகிறேன்' என்ருர்கள். அவர்கள் சென்றுவிட்டார்கள். தொடர்ந்து நானும் பள்ளி சென்றேன். பிறகு அந்த ஆசிரியரிடமும் பிறரிடமும் முறையாகப் பயின்