பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. நிலப் போட்டி "ஊர் இர ண் டு பட்டால் கூத்தாடிக்குக் கொண் டாட்டம்' என்பது பழமொழி. வீடு இரண்டு பட்டால் ஊரா ருக்குக் கொண்டாட்டம்' என்பது இளமையில் நான் கற்ற புதுமொழி. எங்கள் வீட்டில் என் தாயாரும் பெரியம் மாவும் வேறுபட்டதே ஊ ரி ல் சிலருக்குக் கொண்டாட் டமாக அமைந்தது. எங்கள் ஊரின் பக்கத்தில் இருப்பது நெய்குப்பம் என்ற சிறிய கிராமம். அது பிராமணர்களுக்குச் சில நூற்ருண்டுகளுக்கு முன் பிரம்ம தேயமாகக் கொடுத்த ஊர் போலும். எனவே அது சுரோத்திரியம் என்ற பெயரால் வழங்கப்பெற்று வந்தது. சில ஆண்டுகளுக்கு முன் அதில் வாழ்ந்த அந்தணர் பலர் தத்தம்நிலத்தை விற்றுவிட்டார்கள். எங்களுரில் சிலர் அவற்றைவாங்கிக் கொண்டார்கள். எனது பாட்டனரும் அதில் ஒரு பங்கு பெற்ருர். நான் இளையவன யிருந்த பொழுது அந்நிலத்தை என் தாயாரும் பெரியம் மாவும் பங்கிட்டுக் கொண்டு அனுபவித்து வந்தார்கள். நான் வாலாஜாபாத்தில் படித்துக் கொண்டிருந்தபொழுது அந்த ஊரில் மற்ருெரு நிலப்பகுதி விலைக்கு வந்தது. அதில் உண்டான போட்டியை நினைத்தாலும் நெஞ்சம் துண் ணென்கின்றது. - எனது வீ ட் டி ல் சற்று மாறுதல் காணப்பட்டது. எங்களை யெல்லாம் விட்டு வேறு எங்கேயோ சென்றிருந்த தந்தையார் அப்போது மறுபடியும் வீட்டில் வந்து இருந் தார். அவர் வீட்டில் இருந்த நாளிலெல்லாம் எனக்கு வேண்டிய பாடங்களைக் கற்றுக் கொடுப்பார். என் தாயா ருடன் மாறுபட்டிருந்த பெரியம்மாவும் இப்போது பேசிக்