பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலப் போட்டி 77 ஆண்டுக் கொடுத்துவிடலாம் என்றும், எனவே மேலுள்ள சிறு தொகையும் பத்திரச் செலவும் இருந்தால் போதும் என்றும் சொன்னர் அவர். அம்மாவும் சரிதான் என்ருர்கள். விலை ரூபாய் நாலாயிரம் என்று முடிவாயிற்று. இரண்டு நாள் கழித்து வெளியூர் சென்றிருந்த நிலக்காரர் வந்ததும் பத்திரம் எழுத வேண்டும் என்று தீர்மானித்தார்கள். மேல் தருவதற்கும் செலவுக்கும் குறைந்தது ரூபாய் ஆயிர மாவது வேண்டும். அம்மாவிடம் பணம் இல்லை. என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டே இருந்தார்கள். அன்று மாலை பெரியம்மா எங்கள் வீட்டிற்கு வந்திருந் தார். அவர்கள் அம்மாவிடம் ஏதோதோ பேசினர்கள். நானும் அவர்கள் பேசும்போதெல்லாம் பக்கத்தில் உட் கார்ந்துகொண்டு வேடிக்கை பார்ப்பது வழக்கம். அன்றும் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அம்மா தான் நிலம் முடித்து இருப்பதையும், அதற்குத் தன்னிடம் பணம் இல்லை என்பதையும் கூறிப் பெரியம்மாவிடம் ஆயிரம் ரூபாய் கடனுகக் கேட்டார்கள். அவர்களும் சரி பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு, வேறு ஏதோதோ பேசிக் கொண்டிருந்து பின்பு சென்று விட்டார்கள். இரண்டு நாள் கழித்து நிலம் பேசிய தரகர் வீட்டுக்கு வந்தார். 'நாளை மறுநாளில் நிலம் முடியும் என்ற எண் ணத்தில் அம்மா என்றைக்கு ரிஜிஸ்டர் ஆபீசுக்குப் போக வேண்டும் என்று கேட்டார்கள். கொஞ்சம் பணம் குறை கிறது என்றும் அதைச் சரிக்கட்ட அக்கா தருவார்கள் என்றும் கூறினர். அவர் நகைத்தார். என்ன சிரிக்கிறீர்கள்? என்று அம்மா கேட்டார்கள். அவர் அமைதியோடு பதில் சொன்னர். அக்கா உனக்குப் பணம் கொடுக்கப் போவ தில்லை. பூராத் தொகையுமே அவர் கொடுத்து வாங்கிக்