பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலப் போட்டி 81 அன்னையும் அவருக்குச் சளைத்தவரல்லர். தங்கள் ஆத்திரத் தையெல்லாம் சொற்கள் மூலம் கொட்டி அளந்துகொண் ருந்தார்கள். ~ * இச்சோகக் கதை இந்த அளவோடு முடிவு பெறவில்லை. கடைசியில் அந்த ஆண்டு பயிரிட்ட நெல் எங்கள் வீட்டுக்கே வந்து சேரும் ஒரு சூழ்நிலை உண்டாகிவிட்டது. இந்த நிலப்போட்டி முடிந்த ஆறு தினங்களில் எனது தந்தையார் ஆறே நாள் காய்ச்சலில் படுத்து மறைந்துவிட்டார். மறுபடி யும் பிரிந்த சகோதரிகள் ஒன்ருயினர். தந்தை மறைவுக்குப் பின் பெரிய தந்தையார் ஒரளவுக்கு எங்கள் குடும்பத்தை மேல் பார்த்தார் என்று சொல்லலாம். என்ருலும் அவ்வளவு ஆழ்ந்து பற்றுடன் கவனித்தார் என்று சொல்ல முடியாது. எனது அன்னையாரோ கைம்மைக்கோலத்தோடு காட்சி அளித்தார். நான் சிந்தை தடுமாறினேன். அந்த ஆண்டில் போட்டியில் பெற்றுக்கொண்ட நிலத்தில் விளைந்த நெல்லைப் பெரியம்மா எங்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அதற்குப் பிறகு எனது இரு அன்னையர்தம் குடும்பங்களும் பிரியவே இல்லை என்று சொல்லலாம். சுமார் பத்து ஆண்டு களாக மூடப்பட்டிருந்த இடைக்கதவு திறந்துவிடப்பட்டது. அதில் எனக்குத்தான் அதிக மகிழ்ச்சி. இரண்டு வீட்டுக்கு இடையிலும் ஒடி ஆடிப் பழகினேன். இரு வீடுகளிலும் தனித் தனிச் சமையல்தான். என்ருலும் எனக்கு இரண்டு இடத்திலும் பங்கு கிடைக்கும். ஏன் ? பிறகு எல்லாவற்றை யும் எ ன் பெரிய அன்னையார் எனக்காகவே அளித்துச் சென்றபோது, இப்படி ஒன்ருகச் சேரவேண்டிய பொரு ளுக்கு இடையில் வீண் நிலப் போட்டியைக் கிளப்பி யாரோ எழுநூற்று ஐம்பது ரூபாயைச் சாப்பிட்டாரே' என எண்ணியது. سطدحـ