பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. ஒரு ரூபாய் நோட்டு இன்று ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் நோட்டுக்கள் நிறையப் புழக்கத்தில் இருக்கின்றன. ஒரு காலத்தில் போருக்கு முன் ஐந்து ரூபாய்க்குக் குறைந்த நோட்டுக் களே கிடையாது. ஐந்து, பத்து, ஐம்பது, நூறு, ஆயிரம் என்று இப்டித்தான் நோட்டுக்கள் இருந்தன. ஆயிர ரூபாய் நோட்டையும் இடையில் இல்லையெனச் செய்தார்கள் அர சாங்கத்தார். அப்படியே ஒருருபாய் நோட்டும் ஒருகாலத்தில் இருந்து இடையில் இல்லையென்ருகிப் பிறகுப் போர்க்காலத் தின் இடையில் தோன்றி இன்றளவும் சாகாமல் வாழ்கின் றது. நான் பள்ளியில் படிக்கும் அந்த நாளில் ஒரு ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்தது. அந்த ரூபாய் நோட்டில் ஒன்று கெட்டு விட்டிருப்பதை, அரசாங்கம் திரும்பப் பெருங் காலத்தில் கணக்கெடுத்திருந்தால் நிச்சயம் கண்டிருக்கும் என நினைக்கிறேன். ஆம். எதிர்பாராதபடி ஒரு ரூபாய் நோட்டு ஒன்றைச் சுக்கல் சுக்கலாகக் கிழித்துப் பறக்க விட்டேன் நான். ஏன் என்று கேட்கிறீர்களா? எனக்குப் பயித் தியமில்லை . பயந்தான். எங்கள் வீட்டுக் கூடத்தில் ஒரு அலமாரி உண்டு.அதில் எனது பாட்டி தனது துணிமணிகளையும், சாமான்களையும் வைத்திருப்பார்கள். அம்மாவும் சில சமயங்களில் சில்லறை களை வைப்பது வழக்கம். அதற்கு ஒரு சாவியும் உண்டு. அது பெரும்பாலும் பாட்டியின் இடுப்பில் இருக்கும். சில வேளைகளில் கதவிலும் தொங்கும். எனது அப்பா அதை யெல்லாம் தொடமாட்டார். ஒரு நாள் பகல் நான் மட்டும் கூடத்தில் விளையாடிக் கொண்டிருந்தேன். பாட்டி தாழ்