பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு ரூபாய் நோட்டு 83 வாரத்தில் பூக் கட்டிக் கொண்டிருந்தார்கள். அம்மா அடுப் படியில் ஏதோ செய்து கொண்டிருந்தார்கள். அன்று விடு முறையாதலால் நான் வீட்டிலிருக்க ஏதுவாயிற்று. கூடத்து அலமாரியைத் திறந்தேன். பாட்டி பார்த்தார்கள். ஒன் றும் சொல்ல வில்லை. அதில் ஒரு தட்டில் ஒரு மூலையில் சில ஒரு ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. அவற்றுள் ஒன்றை மட்டும் நான் எடுத்து மடித்து என் நூல் ஒன்றில் மறைத்து வைத்துக் கொண்டேன். கதவைப் பழையபடி சாற்றி விட் டேன். அதன் கதவைத் திறக்கும்போது, அதில் ரூபாய் இருக்கிறது என்ருே, அதை எடுத்து மறைக்க வேண்டும். என்ருே நான் நினைக்க வில்லை. அன்றி எடுக்கும் போதும் இதல்ை தாயாரிடம் எவ்வளவு கோபத்துக்கு உள்ளாகித் துன்பம் உற நேரும் என்பதையும் எண்ணவில்லை. ஏதோ குழந்தை உள்ளத்தால் அதை ஒரு விளையாட்டுப் பொருளாக நினைத்து அப்படியே எடுத்தேன். ஒரு ரூபாய் நோட்டு அது என்று தெரியும். தெரிந்தாலும் அதை மாற்றி ஏதேனும் பொருள் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் அதை எடுக்க வில்லை. ஏனெனில் அது கொண்டு ஏதாவது வாங்கில்ை உடனே அது எப்படியாவது என் தாயார் காதுக்கு எட்டும். உடனே எனக்குப் பெருந்தண் டனை கிடைக்கும். ஆகவே அதற்காகவும் நான் எடுக்க வில்லை. ஏதோ விளையாட்டுப் பொருளாகக் கருதி எடுத்து விட்டேன். அவ்வளவுதான். . மாலை ஆறு மணி இருக்கும். விளக்கேற்றிவிட்டார்கள். அம்மா அந்த அலமாரியைத் திறந்தார்கள். இருந்த ஒரு ரூபாய் நோட்டுகளை எடுத்து எண்ணினர்கள். ஒ ன் ப து இருந்தது போலும். மற்றென்றைத் துருவித் துருவி ஆராய்ந்தார்கள். கிடைக்கவில்லை. என்னை அவர்கள் ஒன் றும் கேட்கவில்லை. எங்கே போயிருக்கும்? வரட்டும் கேட்