பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 இளமையின் நினைவுகள் கிறேன்' என்று தனக்குள்ளாகவே சற்று உரத்திப் பேசிக் கொண்டார்கள். சிறிது நேரம் கழித்துக் கோயிலுக்கு மலர் மாலை கொடுத்து விட்டுப் பாட்டி வீடு திரும்பினர்கள்; அவர்களைக் கேட்டார்கள். அவர்கள் தான் பார்க்க வில்லை என்று சொல்லிவிட்டார்கள். வேறு ஏதோ சொல்ல வாயெ டுத்தார்கள். என்ருலும் சொல் வெளியில் வராதபடி அடக் கிக் கொண்டார்கள். ஒரு வேளை "பையன் கதவைத் திறந் தான். அவனைக்கேட்டால் தெரியும்'என்று சொல்ல நினைத்து வாயைத் திறந்திருக்கலாம். ஆயினும் அவ்வாறு சொன்னல் அம்மா என்னை அடித்து அது பற்றி வற்புறுத்திக் கேட் பார்கள் என்று அஞ்சி வந்த சொல்லையும் உள்ளடக்கிக் கொண்டார்கள் என நினைத்தேன். எனது அம்மா, அப்பா வின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பாவுக்கென்று தனி வரவு செலவு கிடையாது. அவர் வீட்டில் இருப்பதே எப்போதோ சிலவேளைகளில் தான். ஆகவே அவசியமான வேளைகளில் கேட்டுப் பணம் வாங்கிக்கொள்வாராம். இல்லாவிட்டால் நண்பர்களிடம் வாங்கிக்கொள்வாராம். அதுவும் இல்லையானல் அம்மா எங் காவது வைத்திருப்பதை எடுத்துக்கொண்டு பிறகு தன் செலவுக்கு எடுத்துக்கொண்டதாக ஒத்துக்கொள்வாராம். அப்படியே அன்றும் அவர்தான் எடுத்துச் சென்றிருப்பார் என அம்மா முடிவுகட்டிவிட்டார்கள். நான் முன்னமே எல்லா நிலபுலன்களும் பிற பொருள்களும் அம்மாவைச் சேர்ந்தன என்பதைக் காட்டி இருக்கிறேன். அப்பா எட்டு மணிக்கு வந்தார். உடனே அம்மா அவருக்குச் சோறுகூடப் போடாது இந்த ரூபாயைப்பற்றிக் கேட்க ஆரம்பித்தார்கள். சாதாரணமாக அவர் எடுத்திருந் தால் "ஆமாம். செலவுக்கு எடுத்துக்கொண்டேன்' என்று