பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 இளமையின் நினைவுகள் கடன்களை முடித்துக்கொண்டு அன்று ஏழு மணிக்கே வாலாஜாபாத் பள்ளிக்கூடம் செல்லப் புறப்பட்டேன். சாதாரணமாக ஏழறை மணிக்குமேல் என் நண்பர் சிலருடன்தான் நான் பள்ளிக்குப் புறப்படுவது வழக்கம். அன்று எனது நூல்களை எடுத்துக்கொண்டு ஏழு மணிக்கே புறப்பட்டேன். அந்த ரூபாய் நோட்டு நான் வைத்த புத்தகத்திலேயே பத்திரமாக இருந்தது. நான் ஆற்றில் இறங்கியதும் ஒரு பக்கமாகச் சென்று உட்கார்ந்துகொண் டேன். திரும்பத் திரும்பப் பார்த்தேன். நோட்டைக் கையில் எடுத்தேன். துண்டுதுண்டாகக் கிழித்தேன். மிக மிகச் சிறுசிறு துண்டுகளாயின. அப்படியே எழுந்து நடந்தேன். இருபதடிக்கு ஒருமுறையாக இரண்டொரு துண்டுகளை வீசி எறிந்துகொண்டே சென்றேன். ஆற்றங் கரையில் வாய்க்காலில் நீர் ஒடிக்கொண்டிருந்தது. கைகளை யும் முகத்தையும் அதில். நன்ருகக் கழுவிக்கொண்டேன். என்ருலும் உள்ளத்தின் மாசினை எப்படிக் கழுவுவது? என்னுல் பாவம் தந்தையார் மனைவியிடம் வசைகேட்டு வாட வேண்டி இருந்தது. ஆயினும் அந்த நிலையில் நான் ஒன்றும் செய்யமுடியாமல் திகைத்தேன். யாரிடமாவது இதைச் சொன்னுல்தான் மனம் நிறைவுபெறும் என்று அன்றுமுதல் நான் நினைத்துக்கொண்டுதான் இருந்தேன். ஆயினும் யாரிடமும் சொல்லவில்லை. இதோ இன்று இந்த நூல்வழிதான் அன்று நான் செய்த களவினைக் கூறி எனது மாசினைக் கழுவும் கழுவாயினைத் தேடிக்கொள்ளுகிறேன். ●=ココcm語。