பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. விழாவும் வேட்டியும் எங்களுர்க் கோயிலைப்பற்றி முன்னமே சொல்லி இருக் கிறேன் அல்லவா! அதற்கு அறக்காப்பாளர்கள் மூன் ருண்டுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுவர். அந்தத் தேர்தல் காலங்களிலெல்லாம் அடிக்கடி சண்டை நிகழும். வேளாண்குலத்தில் பிறந்தவராகி, ஒரே இனமாக உறவு பற்றி வாழும் அந்தக் கிராமத்தில் கோயில் காரணமாக இவ்வாறு அடிக்கடிச் சண்டை நிகழ்வதுண்டு. கோயிலுக்கு நிலத்தின்வழி நல்ல வருமானம் வந்துகொண்டிருந்தது. மேலும் இந்தக்காலத்தைப்போன்று அன்றுமேலே கணக்குக் கேட்க அரசாங்க ஏற்பாடுகள் ஒன்றும் திட்டமாகக் கிடையா. எனவே அந்தப் பதவிக்கு வந்தால் மனம்போலப் பொதுப் பணத்தைச் செலவு செய்ய யாருக்கும் வாய்ப்பு இருந்தது. ஆதலாலே மூன்ருண்டுக்கு ஒருமுறை அந்தப் பதவிக்குப் போட்டியும், அடிதடிகளுடன் தேர்வும் நடைபெற்றுவந்தது. என்ருலும் கோயில் பணிமட்டும் முட்டின்றி நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இந்தக் கோயிலால் வளர்ந்த கட்சி வேறுபாடே பிறகு ஊரில் பல கொலைகளை விளைக்கும் பெரும் சண்டையாக மாறிவிட்டது என்பதைப் பின்னர் காணலாம். G . . அத் திருக்கோயிலுக்கு அம்பலவாணர் கோயில் என்று பெயர். சாதாரணச் சிறு விழாக்களும் ஆண்டு முழுதும் பல பெருவிழாக்களும் அக் கோயிலில் முறையாக நடை பெறும். விழாக்களுக்கு ஊரில் உள்ளவர்கள் கூட்டமாகச் செல்வார்கள். எனினும் அறக்காப்பாளர் தேர்விற்கு எதிர் கட்சியாக நின்று தோற்றவரும் அவர் துணையாக இருப்பவர்