பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 இளமையின் நினைவுகள் களும் கோயிலுக்கு வரமாட்டார்கள். நாட்கள் செல்லச் செல்ல ஏதாவது சமாதானம் செய்துகொண்டு பிறகுதான் கோயிலுக்கு வருவார்கள். ஒரு தேர்தலில் எதிருக்கு எதிராக நின்று, பெரும் சண்டைகளுக்கிடையே அத் தேர்தலை நடத்தி அதில் தோல்வியுற்ற ஒருவர், அடுத்த மூன்ருண்டு களில் வெற்றிபெற்ற பெரிய கட்சியோடு நட்பாளராகி அவர்கள் சார்பில் அடுத்த தேர்தலில் நின்று வெற்றி பெற்ருர். இன்று அரசியல் சதுரங்கத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன. சென்ற தேர்தலில் காங்கிரசை எதிர்த்தவர் இந்தத் தேர்த லில் காங்கிரஸ் அபேட்சகராகவும், நேற்றுவரை காங்கிரஸ் அபேட்சகராக வெற்றிபெற்றுச் சட்டசபையில் இருந்தவர் இன்று எதிர்க்கட்சி அபேட்சகராகவும் நிற்பதைக் காண் கின்றேன். என்ருலும் அந்தக் காலத்தில் எனக்கு அந்தக் கட்சி மாற்றமும் அ த ன் மூ ல ம் அறக்காப்பாளர் பதவி பெற்றதும் வெறும் வேடிக்கைகளாகவே இருந்தன. அப்படிப் போட்டிகள் நடைபெற்றுப் புதுப்புது அறக் காப்பாளர் வரும்போது, புதிதாக வந்தவர் முன் இருந் தவர் செய்ததைக்காட்டிலும் விழா வேடிக்கைகளை அதிக மாகச் செய்து பெயரெடுக்க வேண்டும் என்று முன்னிற் பார்கள். அப்படியே ஒரு ஆண்டு எங்கள் ஊர் அம்பலர் கோயிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் பெருவிழா நடைபெற்றது. அவ்விழாவில் சில நாட்கள் மிக முக்கிய மானவை. அந்த நாட்களில் ஊரில் உள்ளவருள் பலரும் கோயிலுக்குச் சென்று வருவார்கள். ... " ஓராண்டு, ஆண்டுப் பெருவிழாவினை(பிரம்ம உற்சவம்) வெகு சிறப்பாகக் கொண்டாடினர். வெளியூர்களிலிருந் தெல்லாம்கூடப் பலர் அவ்விழாவுக்கு வந்தனர். பெரும்