பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழாவும் வேட்டியும் . 89 பாலும் இரவு விழாக்களே சிறப்பானவையாக இருக்கும். கோயில் ஆற்றங்கரையில் இருந்தமையால் பலர் ஏழு மணிக்கே சாப்பாட்டினை முடித்துவிட்டு இளநிலாவிலே ஆற்றின் மணல் வெளியில் இருந்து பொழுது போக்கு வார்கள். இரவு பத்து மணி அளவில் சுவாமி புறப்படும். அனைவரும் ஒன்ருகச் சென்று இறைவனை வழிபடுவார்கள். பகலில் அத்துணைச் சிறப்பான விழாக்கள் இரா. கொடி யேற்றமும், ஐந்தாம்நாள் விழாவும்தாம் பகல் விழாவில் சிறந்தன. அந்த இரண்டு விழாக்களுக்கும் ஊரில் பெரும் பாலும் எல்லோருமே வந்துவிடுவார்கள். அப்படி வரும் போது எல்லா ஊரிலும் எல்லோரும் செய்வதுபோலவே தம்மை நன்கு அலங்கரித்துக்கொண்டே வருவார்கள். ஆடவர் நல்ல சரிகை வேட்டிகளை அணிந்துகொண்டு, திருநீறும் சந்தனமும் உடலில் பொலிய வருவார்கள். எங்கோ பானைகளில் சுருட்டி மடக்கிப் போட்டிருந்த சரிகைப் புடைவைகளையெல்லாம் எடுத்து அணிந்துகொண்டு பெண் கள் கோயிலுக்கு வருவார்கள். இது எங்கும் காணும் நிகழ்ச்சிதானே! எங்கள் ஊர் மட்டும் இதற்கு எப்படி விதி விலக்காகும் ? எனது அன்னையாரும் இளமையில் என்னை அழகுபடுத் துவதில் ஆசை கொண்டவர்கள். என் தலையில் மயிர் நீண்டு அடர்ந்து இருக்கும். எனக்குச் சிலவேளைகளில் பெண்வேடம் கூடப் போடுவார்கள். தங்க நகைகளையும் வெள்ளி நகை களையும் பூட்டி, அழகிய பாவாடை ரவிக்கை அணிவித்துப் பெண்ணுக்கி மகிழ்வார்கள். அவர்களுக்குப் பெண் இல்லாக் குறைதான். ஆகவே அவர்கள் கோயில் குளம் செல்லும் போதெல்லாம் அழகாகச் சிங்காரித்தே ஒரு கொலு பொம்மை மாதிரி என்னை அழைத்துக்கொண்டு செல்லுவார்கள். அவர்கள் செலவு செய்வதிலும் சற்றுத் தாராள மனம் உடை