பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 இளமையின் நினைவுகள் யவர்கள். ஆகவே உயர்ந்த பட்டுப் புடைவைதாம் அவர்கள் கட்டுவன. எனக்கும் அது போன்று உயர்ந்த ஆடைகளும், வேட்டி முதலியனவும் வாங்கிவர ஏற்பாடு செய்வார்கள். காஞ்சிபுரம் முதலிய ஊர்களுக்கு விழாக்களுக்குச் செல்லும் போது தாமே பல கடைகளுக்குச் சென்று வேண்டிய பட்டு முதலியவற்றை வாங்குவார்கள். அன்று அதிகாரநந்தி விழா; அதாவது பெருவிழாவில் ஐந்தாம் நாள் காலை விழா. ஆண்டவனுக்கு அலங்காரம் செய்து தீப ஆராதனை தொடங்குகின்ற நேரம். ஊர் மக்கள் பலரும் கூடியிருந்தனர். சிலர் ஆண்டவனை அன்போடு வணங்கிக்கொண்டிருந்தனர். சிலர் த த் த ம் ஆடை அணிகள் பற்றியும், ஊர் வழக்குகள் பற்றியும், அடுத்து வரும் தேர்தல் விளைவுகள் பற்றியும் பேசிக்கொண்டிருந்த னர். அக்காலத்தில் கோயிலில் பணியாற்றிய குருக்களுக் கும் ஊரில் ஒரு சாராருக்கும்கூடச் சண்டை. அவர் மண்ட பத்தை விட்டுக் கீழே இறங்கித் திருநீறு தரமாட்டேன் என் பார். இவர்கள் இறங்கத்தான் வேண்டும் என்பார்கள். ஆண்டவன் அருட்பிரசாதமாகிய திருநீற்றைப் பெறுவதில் அச்சிறு கிராமத்தில் இத்துணை வேறுபாடு இருந்தது என் ருல் அது பற்றி நினைக்காதிருக்க முடியுமோ? இது பற்றியும் இன்னும் சில பொருள் பற்றியும் வந்தவர்கள் பேசிக்கொண் டிருந்தார்கள். எனினும் தீய ஆராதனை சமயத்தில் அமைதி குடி கொண்டது. எனது அன்னையார் என்னை அன்று நன்கு அலங் கரித்து அழைத்துச் சென்றிருந்தனர். சென்னையில் இருந்த ஒர் உறவினர் மூலம் வாங்கி வைத்திருந்த நல்ல பட்டு ஒன்றை நான் இடையில் அணிந்திருந்தேன். அந்த வேட்டி காண்பார் அனைவர் கண்ணையும் உருத்திற்று என்னலாம். நான் என்னை மறந்து ஆண்டவனை நோக்கி அழுதுகொண்