பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழாவும் வேட்டியும் 91 டிருந்தேன். என் வாழ்வு காண்பவர் கண்களுக்கு அன்றைய பட்டு வேட்டியைப் போல் வெளிக்குப் பகட்டாகத் தெரிந் தாலும், நான் மிக மிக அல்லலுற்ற வாழ்வையே அன்று தொட்டு இன்றுவரை அனுபவித்து வருகிறேன் என்னலாம். ஆகவே ஆண்டவனைக் காணும் தோறும் அலறி அழுவது என் வழக்கமாகிவிட்டது. இளமையில் பக்தி ஒழுக்கம் பூண்ட என் பாட்டியுடன் அடிக்கடி கோயிலுக்குச் சென்று வழிபட்டு அழுது காமுற்று அரற்றும் வழக்கம் என் வாழ் வின் வழக்கமாகிவிட்டது. வாழ்வில் உற்றவரை ஒருவர் பின் ஒருவராகப் பிரிந்து கொண்டும், எதிர்பாராது பல் வேறு கொடுமைகளில் பட்டுழன்றும் வாழும் என் வாழ்வு என்றும் சோலை வனமாகக் காட்சியளித்ததில்லை. சிற்சில சமயங்களில் என் மனம் பாலைவனத்தைச் சோலைவனமாக்க முயலும். என்ருலும் அதுவும் முழு வெற்றி பெற்றதில்லை. ஆயினும் சிலர் என் வாழ்வைக் கண்டு பொருமையும் கொள் ளும் அளவுக்குப் புறத்தோற்றம் அமைந்துவிட்டது.அன்றும் அப்படித்தான் நான் ஆண்டவன் முன் அழுது புலம்பிக் கொண்டிருந்த அதே வேளையில் என் புறத்தைக் காட்டும் அந்தப் பட்டு வேட்டியைக் கண்டு பலர் பலவாறு பேசிக் கொண்டனர். என் பக்கத்தில் எனது ஒரு சாலை மாணவரும் நண்ப ரும் நின்று கொண்டிருந்தார். அவர் தற்போது இல்லை. இறந்து நெடுங்காலமாயிற்று. அவர் பெயர்கூடச் சரியாக எனக்குத் தற்போது நினைவில் இல்லை. .ெ வ ங் கி ட கிருட்டினன் என எண்ணுகிறேன். சரியோ தப்போ தெரி யாது. அவர் தன் மாமாவுடன் அருகில் நின்றிருந்தார் போலும். நான் என்னை மறந்து இறைவனை நினைத்திருந்த அந்த வேளையில் என் வேட்டியை யாரோ பற்றி இழுப்பது போன்று இருந்தது. நான் யார் என்று திரும்பிப்பார்த்