பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 இளமையின் நினைவுகள் தேன். அவர்தான் என் நண்பர். என் வேட்டியைப் பிடித்து அதன் மழமழப்பைக் கைகளால் சுவைத்துக் கொண்டிருந் தார். தீப ஆராதனையும் முடிந்தது. திரும்பினேன். நண்பர் 'மாமா, எனக்கு இதுபோல வேட்டி வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டார். மாமாவும் - ஆண்டவனைத் தொழுது கொண்டிருந்தவர், அவர் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ள வில்லை. ஆகவே நண்பர் சற்று ஆத்திரமடைந்து அதிகமாகக் கூச்சலிட்டுத் தனக்கு அது போன்ற வேட்டி வேண்டும் என்பதை வலியுறுத்தினர். பாவம் பத்துப் பன்னி ரண்டு வயதான அந்த நிலையில் அவர் அக்கோயிலை மறந்து அழகிய வேட்டியில் ஆசை கொண்டது தவறு அல்லவே, என்ருலும் வழிபாட்டுக்கு இடையில் அவர் செய்த தொந்தரவு தாளாமல் அவர் மாமா அவர் முதுகில் இரண்டு அறை அறைந்தார். நண்பர் மேலும் ஓவென்று கூச்சலிட்டு அழுதார். அது அனைவர் கவனத்தையும் கவர்ந்தது. ஐயர் திருநீறு அளித்தார். அனைவரும் பெற்றனர். நண்பர் மட்டும் விசித்து விசித்து அழுது கொண்டே அதுபோல வேட்டி வேண்டும்’ என்று முணகிக்கொண்டே இருந்தார். அவர் மாமா அவரைத் தனியாக அழைத்து ஏதேதோ சொன்னர். அவர்கள்தாம் பணக்காரர்கள் ; அதுபோன்ற உயர்ந்த துணி எல்லாம் வாங்கமுடியும். நாம் அதற்கு எங்கே போவது? மேலும் அது எங்கேயோ பட்டினத்தில் இருந்து வாங்கிவந்தது. இந்த ஊரில் எங்கும் கிடைக்காது’ என்று சமாதானப் படுத்தினர் என்று பக்கத்தில் உள்ளவர்கள் பேசிக்கொண் டார்கள். ஆகா! அந்தப் பிஞ்சு உள்ளங்களில்தாம் ஏழை பணக்காரர் என்ற வேறுபாட்டை எப்படித்தான் தூவுகிருர் கள் என நினைத்தேன். நாங்கள் எங்கள் ஊரில் அப்படி ஒன்றும் பெரும் செல்வர்கள் அல்லர். எனது அன்னையார் சற்றுத் தாராளமாகச் செலவு செய்து சிறக்க வாழவேண்டும்