பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்த தந்தையார் 95 பொங்கல் வந்தது. பொங்கல் என்ருல் எங்கள் ஊரில் . பெருங் கொண்டாட்டம். ஊரில் அதுபோன்ற விழா அன்று மட்டு மன்று, இன்றும் வேருென்றும் கிடையாது. வீடெல்லாம் துப்புரவு செய்து, வெள்ளை அடித்து, மாடு களை அழகு செய்து, பற்பல வகையில் வண்ணங்கள் பூசி ஊரையே அனைவரும் அழகுபடுத்துவார்கள். நானும் பொங்கலுக்காக ஊரிலேயே சில நாள் தங்கி இருந்தேன். அப்பா அத்த ஆண்டு முயன்று நல்ல வேலை செய்தார்கள். எங்கள் வீட்டில் உழவு இல்லை ஆதலால் மாடுகள் கிடையா. என்ருலும் பாலும் மோரும் எங்கள் உயிராக நின்றமையின் இரண்டொரு பசுக்கள் இருந்தன. எனது தந்தையார் அவற்றை அழகுபடுத்தினர். மாட்டுப் பொங்கலன்று காலை அவர் உடம்புக்கு ஏதோ தள்ளவில்லை என்று சொல்லிப் படுத்தார். அன்றைக்கு அவர் ஒன்றுமே உண்ணவில்லை. நானும் அன்றைப் பொழுது வீட்டில் இருந்து மறுநாள் காலை வாலாஜாபாத் பள்ளிக்கூடம் சென்றுவிட்டேன். பிறகு அந்த இளமைப் பருவத்தில் மற்றவர்களோடு விளையாட்டும் வேடிக்கையுமே கூடியதால் அப்பாவின் உடல்நிலையைப் பற்றி அதிகமாக நினைக்கவே இல்லை. நான்கைந்து நாட்கள் கழித்து ஊரில் இருந்து ஆள் வந்தது. அப்பாவுக்கு உடல்நிலை மிகக் கெட்டுவிட்டதாகவும் நான் உடனே புறப்பட்டு வர வேண்டும் என்றும் சொன்னர்கள். நான் அப்போதும் அதிகமாகக் கவலையுறவில்லை. ஏதோ பு ற ப் பட்டு ச் சென்றேன். வீட்டில் பல உறவினர்கள் சுற்றி உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். சிலமணி நேரம் சென்றது. இரவும் வந்தது. நான் உண்டு உறங்கிவிட்டேன். விடியற்காலையில் தந்தையார் ஆவி பிரிந்தது. அனைவரும் அலறினர். நானும் நைந்தேன். ஒ'வென