பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. தேர்தல் விந்தை தேர்தல் இன்று அடிக் கடி நடைபெறுகின்றதைக் காண்கிருேம். கட்சிகள் வெறிகொண்டு மாற்ருரைத் தாக்கியும் இழித்தும் செயலாற்றுவது நமக்குப் புதியது அன்று. சிலசில தேர்வுகளின் மூலம் கொலை முதலிய கொடுமைகளும் நடக்கின்றதைப் பார்க்கிருேம். இன்று வயது வந்தோருக்கெல்லாம் வாக்குரிமை உண்டு. ஆனல் அன்று நான் வாலாஜாபாத்தில் படித்துக்கொண்டிருந்த போது - ஏழாவதோ எட்டாவதோ படித்துக்கொண் டிருந்தபோது - அனைவருக்கும் வாக்குரிமை கிடையாது. அரசாங்கத்துக்கு வரி கட்டுபவர்கள் மட்டுமே வாக்காளர்க ளாக இருந்தார்கள் என நினைக்கிறேன். சட்டசபைகளுக்குப் பத்து ரூபாய்க்கு மேல் வரி கட்டுபவர்களும், மாவட்டம் முதலியவற்றிற்குச் சாதாரண வரி கட்டுபவர்கள் தொடங்கி வரி கட்டுபவர் அனைவரும் வாக்காளராக இருந்தார்கள் என்பது என் எண்ணம். அது சரியா தப்பா என்று நான் இன்று ஆராய, நினைக்கவில்லை. இன்றுதான் எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள் என மாறிவிட்டார்களே ! அந்தக் காலத்தில் மாவட்ட உறுப்பினர்களுக்கு அதிக சலுகைகள் உண்டாம். அந்த மாவட்டத்தில் செல்லும் பஸ்'ஸி லெல்லாம் 'இனும் சலுகை வேறு பல அரசாங்க உதவிகள். இப்படிப் பலப்பல. எனவே அதற்கெல்லாம் போட்டி இருந்தது. நான் சிறிய பிள்ளையாக இருந்தமையால் அது பற்றி எல்லாம் அதிகமாகத் தெரியாது. என்ருலும் அந்தத் தேர்தல் வேடிக்கைகளில் நான் கலந்துகொண்டு வேடிக்கை பார்ப்பதுண்டு. 'கா ந் தி க்கு ஜே, காங்கிரசுக்கு ஜே'