பக்கம்:இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தந்தை பெரியார்


இப்படி புராணங்களில் உள்ள நம்பத்தகாத செய்திகளை யெல்லாம் அப்பட்டமான தன்து பகுத்தறிவால் அந்தச் சின்ன வயதிலேயே தட்டிக் கேட்டார்.

ஒரு நாள் இராமநாத அய்யர் என்பவரின் கடைக்குச் சென்றார். அவர் 'எல்லாம் தலை விதிப்படிதான் நடக்கும்' என்று அடிக்கடி சொல்வார். அவர் கடையில் வெயிலுக்காக வைத்திருந்த தட்டியின் காலைக்கீழே தள்ளி விட்டார். உடனே தட்டி கீழே சாய்ந்தது. அது இரரமநாதய்யர் தலையில் விழுந்தது. தலைவிதி உன் தலையில் தட்டியைத் தள்ளி விட்டது. என்னை ஏன் அடிக்க வருகிறாய்? என்று சொல்லிக்கொண்டே ஒடி விட்டார், இராமசாமி!

வெங்கட்டர் உழைத்து முன்னேறியவர்.

11