பக்கம்:இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தந்தை பெரியார்
 


அவருடைய தந்தையார் கோபம் கொண்டு கண்டித்தார். மிகுந்த சீற்றத்தோடு அவர் கண்டித்ததில் இராமசாமியாருக்கு வெறுத்துப் போய்விட்டது.

வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை. இந்தக் குடும்பமே வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார். சாமியாராகிக் காசிக்குப் போகவேண்டும் என்று முடிவு செய்தார்.

நண்பர்கள் இரண்டு பேரைத் துணைக்கு கூட்டிக் கொண்டு சென்னைக்குச் சென்றார். தெருக்களில் அலையும் போது, ஈரோட்டுக்காரர்கள் சிலரைக் கண்டு ஒளிந்து கொண்டார்கள் தங்களைத் தேடித்தான் அந்த ஈரோட்டுக்காரர்கள் வருவதாக எண்ணினர். கூட வந்த நண்பர்கள் ஊருக்குப் போய்விடலாம் என்று சொன்னார்கள். பெரியார் ஒப்புக் கொள்ளவில்லை. அவர்கள் இருவரும் து.ாங்கிய நேரம்பார்த்து சென்னையை விட்டுப் புறப்பட்டார்.

இராமசாமி சென்னையிலிருந்து பெஜவாடா போய்ச் சேர்ந்தார். பெஜவாடாவில் ஒரு சத்திரத்தில் தங்கினார். அங்கே இரண்டு அய்யர்கள் நண்பர் ஆனார்கள். அவர்களும் வீட்டை விட்டு ஒடி வந்தவர்களே. மூவரும் ஊருக்குள் சென்று பிச்சை எடுத்து வருவார்கள், சமைத்துச் சாப்பிடுவார்கள். மீதி நேரத்தில் சத்திரத்துத் திண்ணையில் உட்கார்ந்து அரட்டை அடிப்பார்கள். அய்யர்கள் புராணக் கதைகளைச் சொல்வார்கள். இராமசாமி அந்தக் கதைகளில் உள்ள முரண்பாடுகளை எடுத்துச் சொல்வார். அறிவுக்குப் பொருந்தாத செய்திகளை எடுத்துக் காட்டுவார். அய்யர்கள் அதற்கு தத்துவ

20