பக்கம்:இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தந்தை பெரியார்
 


"நீங்கள் என் வீட்டிலேயே இருங்கள்" என்று கூறினார். அய்யர்கள் சமையல் வேலை தெரிந்தவர்கள். அவர்கள் சமைப்பார்கள். எல்லாரும் சாப்பிட்ட பிறகு, முதலியார் அலுவலகம் செல்வார். நண்பர்கள் மூவரும் சத்திரத்து வழக்கம் போல் பிச்சை எடுக்கப் போய் விடுவார்கள். அலுவல் முடிந்து முதலியார் வீடு திரும்புவதற்கு முன்னால் இவர்கள் விட்டிற்கு வந்துவிடுவார்கள்.

ஒருநாள் தற்செயலாக அடுப்பறைக்குள் முதலியார் நுழைந்த பொழுது, ஒரே பாத்திரத்தில் பலவகை அரிசிகள் கலந்திருப்பதைப் பார்த்தார். இது எப்படி வந்தது என்று கேட்டார். அவர்கள் பிச்சை எடுத்த விவரத்தைக் கூறினார்கள்.

"என் வீட்டிற்கு வந்த பிறகு நீங்கள் ஏன் பிச்சை எடுக்க வேண்டும். இங்குதான் வேண்டிய பொருள்கள் இருக்கின்றதே. இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள்" என்று கோபித்துக் கொண்டார்.

அந்தக் காலத்தில் புராணக்கதைகள் சொல்லத் தெரிந்தவர்களை மிகப் பெரிய பண்டிதர்கள் என்று மக்கள் பாராட்டுவார்கள். பெஜவாடாவில் இருந்த தமிழர்கள் இவர்களைத் தங்கள் விடுகளில் கதாகாலட்சேபம் செய்ய அழைத்துச் செல்வார்கள். அய்யர்கள் புராணக் கதைகளை வடமொழி சுலோகங்களோடு சொல்வார்கள். தமிழில் விளக்கம் சொல்வார்கள். அவர்கள் தமிழில் சொல்லும் விளக்கத்தை இராமசாமி தெலுங்கில் சொல்வார். தெலுங்கில் அவர்கள் சொன்னதை மட்டும் சொல்லமாட்டார். இவருடைய கிண்டலையும் சேர்த்துச் சொல்வார். ஒரே நகைச்சுவையாக இருக்கும்.

22