பக்கம்:இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தந்தை பெரியார்
 


சிறிய பார்சல் வந்தது.

அஞ்சலில் வந்த அட்டைப்பெட்டியை தன் தந்தை கையில் கொடுத்தார் இராமசாமி. பெட்டியைத் திறந்து பார்த்த வெங்கட்டர் வியப்படைந்தார். காசியில் விற்ற மோதிரம் தவிர எல்லா நகைகளும் அப்படியே இருந்தன.

"அடே இராமசாமி இவ்வளவு நாளாக எப்படிச் சாப்பிட்டாய்?" என்று கேட்டார். நகைகளை ஒவ்வொன்றாக விற்றுச் செலவழித்திருக்க வேண்டும் என்று எண்ணினார். ஆனால் நகைகள் அப்படியே இருக்கவே தன் மகன் எப்படி வாழ்ந்தான் என்பது அவருக்குப் புரியவில்லை.

"அப்பா. ஈரோட்டில் நீங்கள் கொடுத்த பிச்சையை எல்லாம் மற்ற ஊர்களில் நான் வசூல் பண்ணி விட்டேன்." என்று சொன்னார் இராமசாமி, இதைத் கேட்டு எல்லூர் நண்பரும், மண்டிக் கடைகாரரும் சிரிப்பாய்ச் சிரித்தார்கள்.

அன்றே தந்தையும், மகனும் ஈரோட்டுக்குப் புறப்பட்டு வந்தார்கள்.

பொது வாழ்க்கை


வெங்கட்டர் தன் மகன் பொறுப்புள்ளவன் ஆக வேண்டும் என்பதற்காக சில ஏற்பாடுகளைச் செய்தார். முதலில் தன் கடையின் பெயரைத் தன் மகன் பெயருக்கு மாற்றினார். வெங்கட்ட நாயக்கர் மண்டி என்ற பெயர் இராமசாமி நாயக்கர் மண்டி என்று மாறியது.

30