பக்கம்:இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தந்தை பெரியார்

அதனால் இந்தி எதிர்ப்பு வேகம் கொண்டது.

தமிழ்நாட்டுப் பென்கள் மாநாடு ஒனறு சென்னையில் நடந்தது. அதன் தலைவர் நீலாம்பிகை அம்மையார் அவர்கள் தமிழ்த்தலைவர் மறைமலையடிகளின் மகள் ஆவார். திருமதி நீலாம்பிகையார் தலைமையில் நடந்த பெண்கள் மாநாட்டில் இந்தியை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த மாநாட்டில் தான் ஈரோட்டு இராமசாமி அவர்களை, 'நமது பெரியார்' என்ற பட்டத்தினை அளித்து நீலாம்பிக் கையம்மையார் முதன் முதலாகக் கூறினார்கள். அன்று முதல் எல்லோரும் பெரியாரைப் பெரியார் என்றே குறிப்பிட்டார்கள்.

தமிழ் மக்கள் இந்தியை எதிர்த்துப் போராடத் தூண்டியதற்காக பெரியாரை அரசாங்கம் சிறையில் அடைத்தது.

அந்த நேரத்தில் மற்ற தலைவர்கள் ஒன்று கூடி தமிழர் மாநாடு ஒன்றை நடத்தினார்கள். பெரியார் சிறையில் இருந்தமையால் மாநாட்டில் அவர் படம் ஒன்றை வைத்து அவர் தலைமையில் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். பன்னிர்ச்செல்வம் அந்தக்காலத்தில் இருந்த மிகப்பெரிய தலைவர்களில் ஒருவர். அவர் மக்கள் தனக்குப் போடவந்த மாலைகளை வாங்கிப் பெரியார் படத்துக்கு அணிவித்தார். பெரியார்தான் நம் தலைவர் அவருடைய தலைமையில் நாம் போராடுவோம்! வெற்றி பெறுவோம்! என்று முழக்கமிட்டார்.

சிறையில் இருந்த பெரியாருக்கு நோய் உண்டாயிற்று. அதனால் அரசாங்கம் அவரை விடுதலை செய்தது. ஒயாமல் உழைத்துக் கொண்டே இருந்தால் நோய் வராது. உழைக்காவிட்டால்தான்

48