பக்கம்:இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தந்தை பெரியார் நிலையினர் என்ற கருத்து நிலவுகிறது. இதற்கெல்லாம் பெரியாரின் ஒயாத உழைப்புத்தான் காரணமாகும்.

மணியம்மையார்


அன்னை நாகம்மையார் இருந்த வரை பெரியார் தன்னைப்பற்றிக் கவலைப் படாமல் இருந்தார். திராவிடர் கழகத்தைப் பற்றியும், நாட்டைப்பற்றியுமே அவருடைய கவலையெல்லாம் இருந்தது. 1933ம் ஆண்டு மே 11ம் நாள் அம்மையார் மறைந்தார். அன்னையார் தன்னைப் பற்றியோ, தன் உடல் நலத்தைப் பற்றியோ சிறிதும் சிந்திக்கவில்லை. கணவர் நலமே தன் நலமெனக் கருதி வாழ்ந்து வந்தார். கணவர் விருப்பமே தன் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.

படிப்பில்லாத அம்மையார் பெரியாரின் துணையாய் ஆனபின் அவருடைய கொள்க்ையே தன கொள்கையாக ஏற்றுக் கொண்டார். பெரியாருக்குத் தொண்டு செய்வதே தனது வாழ்க்கைத் திட்டமாக அன்னையார் கொண்டிருந்தார்.

ஏறத்தாழ ஒராண்டு காயம் பெரியார் வெளி நாடுகளில் பயணம் செய்தார். அந்தக் காலத்தில் அம்மையார் வீட்டில் தனியே இருந்தார். கணவருக்காக உழைக்க முடியாமலும், கணவர் அருகில் இல்லாமலும் அம்மையார் உடல் நோயுற்றது. அந்த நோயே வளர்ந்து அவர் உடலைத் தளரச் செய்தது. இறுதியில் இறந்து போனார்.

அன்னை நாகம்மையார் இறந்த போது, பெரியாருக்கு வயது 54. முதுமைப் பருவம் தொடங்கி விட்டது. தொடர்ந்து கூட்டங்களுக்குப் போவதும், கொள்கை விளக்கங்கள் பேசுவதுமாக உழைத்துக்

54