உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு பிடி கடுகு

9

காலடியில்‌ குழந்தையை வளர்த்தி விட்டுத் தானும்‌, அவர்‌ காலில்‌ வேரற்ற மரம் போல விழுந்து வணங்‌கினாள்‌. “தலைவரே! என்‌ குழந்தைக்கு உயிர்‌ கொடுங்கள்” என்று கதறினாள்‌.

புத்தர்‌ பெருமான்‌ இறந்த குழந்தையையும்‌, கெளதமையின்‌ மன நிலைமையையும்‌ உடனே உணர்ந்து கொண்டார்‌. “குழந்தாய்‌ எழுந்திரு” என்று அருளினார்‌. அவர்‌ குரலில்‌ தெய்வத் தன்மை உடைய ஓர்‌ அமைதி இருந்தது. கெளதமை எழுந்து நின்றாள்‌.

“உன்‌ குழந்தை இறந்து விட்டதா? அதற்கு உயிர்‌ கொடுக்க வேண்டுமா? நல்லது மருந்து கொடுக்கிறேன்‌. கொஞ்சம்‌ கடுகு கொண்டு வா.”

“இதோ கொண்டு வருகிறேன்‌” என்று கூறிப்‌ புறப்பட்டாள்‌.

“குழந்தாய்‌!” என்று கூப்பிட்டார்‌ புத்தர்‌. கெளதமி திரும்பி வந்து, “இன்னும்‌ ஏதேனும்‌ கொண்டு வர வேண்டுமோ?'” என்று வினவினாள்‌. அவளுக்குத்‌ தன்‌ குழந்தை பிழைத்துக் கொள்ளும்‌ என்னும்‌ நம்பிக்கை ஏற்பட்டு விட்டது.

“வேறு ஓன்றும்‌ வேண்டாம்‌. ஒரு பிடி கடுகு மட்டும்‌ வேண்டும்‌. ஆனால்‌, கொண்டு வரும்‌ கடுகு, யாரும்‌ சாகாதவர்‌ வீட்டிலிருந்து கொண்டு வர வேண்டும்‌. ஆணோ, பெண்ணோ, பெரியவரோ, சிறியவரோ இன்றைய வரையில்‌ ஒருவரும்‌ சாகாதவர்‌ வீட்டிலிருந்து வாங்‌கிக்‌ கொண்டு வரவேண்டும்‌. தெரி‌கிறதா……?”