பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
VIII

வரலாறு, இலக்கியம் போன்றவை பற்றிய தகவல்கள் மிகக் குறைவாகவே இடம் பெற்றிருந்தன, பன்னூலாசிரியர் அல்ஹாஜ் M.R.M. அப்துற்-றஹீம் B.A., அவர்களின் இஸ்லாமியக் கலைக் களஞ்சியம் வெளிவந்ததும் இக்குறை பெருமளவுக்கு நீங்கிற்று என்று சொல்லலாம். அன்னார் ஆற்றிய இச்சிறப்புமிகு பணிக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டிருக்கின்றோம்.

முஸ்லிம் சிறார்களுக்கு இலகுவான நடையில், ஒரே தொகுதியாக கலைக்களஞ்சியம் ஒன்று வெளிவந்தால் அது எத்துணைச் சிறப்புடையதாக இருக்கும் என்று பலப்போதும் நான் எண்ணிப் பார்த்ததுண்டு. என் எண்னத்துக்கு ஓர் ஆக்கபூர்வமான வடிவம் கொடுத்தமை போன்று கலைமாமணி மணவை முஹம்மது முஸ்தபா M. A. அவர்கள் ஒரழகிய தொகுப்பை வெளியிட்டுள்ளார்கள்.

இதனைக் கையெழுத்துப் படியிலேயே வரிக்கு வரி படித்தேன். தேவையான திருத்தங்களும் செய்தேன். எனினும் எங்கள் கவனத்தையும் மீறி ஏதேனும் பிழைகள் காணப்படின் வாசகர்கள் பொறுத்தருளுமாறும் அவற்றைத் தொகுப்பாசிரியருக்குத் தெரிவிக்குமாறும் வேண்டுகிறோம்.

இத்தகு அரிய அவசியமான, பயன்மிக்க நற்பணியைச் செய்து முடித்துள்ள கலைமாமணி மணவை முஹம்மது முஸ்தபா அவர்கள் நம் நல்வாழ்த்துக்கு உரியவர். அல்லாஹு ஸுப்ஹானஹு வ தஆலா அவர்களுக்கும், இத்திருப்பணியில் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தோருக்கும் வாழ்க்கையின் அனைத்து நலன்களையும் தந்தருளுமாறு துஆச் செய்கிறேன்.

நம் ஒவ்வொருவரின் இல்லத்திலும் இத்தொகுப்பு கட்டாயம் இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கின்றேன்.

வ ஆகிரு த்ஃவான அனில் ஹம்து
லில்லாஹி ரப்பில் ஆலமீன்.

எம். அப்துல் வஹ்ஹாப், எம். ஏ. பி. டிஹெச்.