பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 ()

இலங்கை வாழ் தமிழ் முஸ்லிம்களின் முன்னேற்றத்தில் பெரும் அக்கறை கொண்டவர். அவர்களிடையே விழிப் புணர்ச்சி உண்டாக்க விழைந்தார். இதற்காக முஸ்லிம் நேசன்' எனும் இதழைத் தொடங்கினார். அவ்விதழ் மூலமாக முஸ்லிம் மக்களிடையே மறு மலர்ச்சியைத் தோற்றுவிக்க முயன் றார். இவ்வகையில் இவரே முதல் தமிழ் முஸ்லிம் பத்திரிகை ஆசிரியர் ஆவார்.

கல்வி வளர்ச்சிக்கு வழிகோலுவதன் மூலமே, முஸ்லிம்களின் முன்னேற்றத் தை விரிவுபடுத்தவும், விரைவுபடுத்த வும் முடியும் எனக் கருதினார். இதற் காக ஆங்காங்கே மதரஸாக்களையும் பள்ளிக்கூடங்களையும் தோற்றுவித் தார். இவற்றின் மூலமாக மார்க்கக் கல்வியும் நவீனக் கல்வியும் பெற வழி வகுத்தார். பெண் கல்விக்காகப் பெண் பாடசாலைகளையும் உருவாக்கினார். இன்று பிரபலமாக விளங்கும் ஸாஹி ராக் கல்லூரிக்கு அடித்தளம் இட்ட வரும் இவரே.

முஸ்லிம்கள் அரசியலிலும் முன்னேற வேண்டும் எனப் பெரிதும் விரும்பி இவரது பெரும் முயற்சியின் விளைவாக முதன் முறையாக சட்ட சபையில் பிரதிநிதித்துவம் கிடைத்தது. இவர் இரண்டாண்டுகள் ஞானதீபம்’ எனும் இதழையும் நடத்தினார்.

от тrf.

இவர் பல நூல்களை எழுதியுள்ளார். அரபிப் பாடநூல்களையும், அரபி இலக்கண நூல்கள் பலவற்றையும் எழுதியுள்ளார். வரலாற்று அடிப் படையில்ான சில நூல்களையும் படைத்துள்ளார். அவற்றுள் தலை சிறந்த தமிழ் நூலாக விளங்குவது அசன்பே சரித்திரம்' என்பதாகும். சரித்திரம் எனப் பெயர் கொண்டிருப் பினும் இது ஒரு சமூகப் புதினமாகும்.

சிரியா

வரலாற்றுப் புதினமும் மர்மப் புதின மும் தமிழில் உருவாக இப்புதினமே வழிகாட்டி நூலாக அமைந்தது.

1898ஆம் ஆண்டில் இவர் இறப்பெய் தினார். 1977ஆம் ஆண்டு இலங்கை அரசு இவர் நினைவாகத் தபால் தலை வெளியிட்டுள்ளது.

சிரியா: சிரியா அரபுக் குடியரசு மத்திய கிழக்கில் உள்ள முஸ்லிம் நாடு லெபனான், மத்திய

ஆகும். ஈராக், தரைக்கடல், துருக்கி, ஜோர்டான், இஸ்ரேல் ஆகிய நாடுகளை எல்லை

களாகக் கொண்டது. அதன் இன்றை யப் பரப்பளவு 1, 85, 180 ச.கி.மீ ஆகும். மக்கள் தொகை 69 இலட்சம் சிரியா நாடு முற்காலத்தில் ஷாம்' என அழைக்கப்பட்டது. இங்கு வாழும் மக்களில் 88 சதவிகிதம் பேர் முஸ்லிம் களாவர். ஏனையோர் கிருஸ்தவர் களாவர். நாட்டின் தேசிய மொழி அரபு மொழியாகும்.

இந்நாடு எழுநூறு ஆண்டுகளுக்கு மேலாக ரோம, கிரேக்கப் பேரரசு களின் ஆதிக்கத்தில் இருந்தது. இஸ் லாம் பரவத் தொடங்கிய பின்னர் முஸ்லிம்களின் ஆதிக்கத்தின் கீழ் இஸ் லாமிய நாடாகியது. முதல் உலகப் போருக்குப் பின் ஃபிரெஞ்சு ஆட்சியின் கீழ் வந்தது. மக்களின் சுதந்திரப் போராட்டத்தின் விளைவாக 1945 -ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.

1948இல் எகிப்துடன் இணைந்து ஒரே நாடாக ஐக்கிய அரபுக் குடியரசு ஆகியது. மூன்று ஆண்டுகட்குப்பின் பிரிந்து மீண்டும் தனி நாடு ஆகியது. பின்னர், எகிப்து, ஈராக், சிரியா ஆகிய மூன்றும் இணைந்த கூட்டாட்சி அமைத் தன. ஒரே ஆண்டில் தனியே பிரிந்து ஜனநாயக சோஷிலிசக் குடியரசாக உருவாகியது. 1967இல் இந்நாட்டின்