பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீதக்காதி

கோலான் மலைகளை இஸ்ரேல் கைப் பற்றியது. அதன் விளைவாக 1973இல் இஸ்ரேலை எதிர்த்து நடந்த போரில் சிரியாவும் பங்கு கொள்ள வேண்டிய தாயிற்று.

சிலுவைப் போர் ஐரோப்பாக் கண் டம்வரை இஸ்லாம் வேகமாகப் பரவி வருவதை விரும்பாத கிருஸ்தவ ஆட்சி யாளர்கள் முஸ்லிம்கள் மீது தொடுத்த போரே சிலுவைப் போர் என அழைக் கப்படுகிறது. இப்போரின்போது கிருஸ் தவர்கள் தங்கள் உடைகளின் மீது சிலு வைச் சின்னத்தைப் பொறித்துக் கொண்டார்கள். இதுவும் இப்பெயருக் குக் காரணம் ஆகும்.

துருக்கிய இனத்தின் ஒரு பிரிவினர் செல்ஜுக்குகள்ஆவர். இவர்கள் பெரும் எண்ணிக்கையில் இஸ்லாத்தைத் தழுவி னர். முஸ்லிம்களாகிவிட்ட பின்னரும் தங்களை ரோமானியர்கள் ஆளுவதை இவர்கள் விரும்பவில்லை. எனவே, ரோ மர்களை எதிர்த்து முஸ்லிம்கள் போரிட லாயினர். ஆசியப் பகுதிகளிலிருந்து ரோமர்களை விரட்டி, அவர்களின் ஆட்சிப்பகுதிகளைக் கைப்பற்றினர்.

இதனைக் கண்ட பேரரசர் அலெக்ஸி யஸ் போப் இரண்டாம் அர்பனின் உதவியை நாடினார். அப் போது கிரேக்க, ரோம மதத் தலைவர் பிளவு ஏற்பட்டிருந்தது. முஸ்லிம்கள் மீது படையெடுப்பதன் மூலம் போப் இப்பிளவைப் போக்க எண்ணினார். 1095 ஆம் ஆண்டில் ஃபிரான்ஸில் உள்ள கிளர்மாண்ட் என்ற இடத்தில் கிருஸ்தவர்களின் மத உணர் வை வெறித்தனமாகத் தூண்டிப் பேசி னார். போப்பின் பேச்சு ஐரோப்பிய கிருஸ்தவ ஆட்சியாளர்களிடையேயும் பொது மக்களிடையேயும் உள்ளக் கிளர்ச்சியை உண்டாக்கியது. 1,50,000 ஃபிரெஞ்சு நார்மன்கள் கான்ஸ்டாண்டி

கமன்னஸ்,

களிடையே

§ {

நோபிளில் கூடி முஸ்லிம்களுக்கு எதி ராகப் போர் தொடுக்கலாயினர். சிலு

வைப்போர் சிறிதும் பெரிதுமாக ஒன்பது முறை நடைபெற்றதாகக் கணக்கிட்டுள்ளனர்.

தொடக்கத்தில் கிறிஸ்தவர்கள் கை ஓங்கியிருந்தது. அவர்கள் ஜெருசலம், அண்டியோக் (அன்தாகிய்யா) வரை படை நடத்தி வெற்றி கண்டனர். 1114வரை வெற்றி முகமாக இருந்த கிருஸ்தவர்களை முஸ்லிம்கள் தடுத்து நிறுத்தினர். சிலுவைப் போர் வீரர்கள் கைப்பற்றிய பகுதிகளைப் படிப்படி யாகக் கைப்பற்றலாயினர்.

1 187இல் சுல்தான் ஸ்லாஹாத்தின் என்பவர் ஜெருசலத்தைக் கைப்பற்றி னார். அதன்பின் வந்த மம்லுக் மன்னர்கள் கிருஸ்தவர்களை சிரியாவி லிருந்து 1291இல் அடியோடு அகற்றி

ଈ ff .

இச்சிலுவைப் போர் சுமார் 200 ஆண்டுக்காலம் நடைபெற்றது. இப் போரின் விளைவாக கிருஸ்தவர்களுக் கும், முஸ்லிம்களுக்குமிடையே பெரும் மனக்கசப்பு நெடுங்காலம் தொடர்ந் தது. சுல்தான் ஸ்லாஹாத்தீன் கைப் பற்றிய ஜெருசலத்தை மீண்டும் கைப் பற்றுவதே அவர்களின் வெறியாக இருந்தது. அதன் விளைவாகவே 1917 -இல் பிரிட்டீஸ் தளபதி அல்லன்பீ மீண் டும் ஜெருசலத்தைக் கைப்பற்றினார். முஸ்லிம்களுக்குச் சொந்தமான மண் னில், இரண்டாம் உலகப் போருக்குப் பின் யூதர்களுக்கென இஸ்ரேல் நாட் டை உருவாக்க அமெரிக்க, ஐரோப் பிய நாடுகள் உதவியதும் இஸ்ரேல் ஜெருசலத்தைக் கைப்பற்றியதை ஆத ரித்ததும் சிலுவைப்போரின் தொடர்ச் சியே யாகும்.

சீதக்காதி; வள்ளல் தன்மைக்கோர் எடுத்துக்காட்டாய் விளங்கியவர் வள்