பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

ளல் தேக்காதி. செத்தும் கொடை கொடுத்தார் சீதக்காதி' எனும் பழ மொழி இவர் கொடைத்திறத்துக் கோர் உதாரணமாகும். இவரது இயற் பெயர் ஷெய்கு அப்துல் காதிர் என்ப தாகும். இப்பெயரே நாளடைவில் சுருங்கி சீதக்காதி என்றாயிற்று. இவர் தந்தை பெயர் மெளலா சாகிப் என்பதாகும். தாயார் பெயர் முஹம்

மது பாத்திமா, சீதக்காதி தென் காயலில் பிறந்தவராவார். எனினும்

இவர் வாழ்ந்த தெல்லாம் கீழக்கரை யிலேதான்.

இளம் வயதிலேயே மார்க்க அறிவும் நல்லொழுக்கச் சிந்தனையும் நற்குணங் களும் சிறப்பாக அமையப்பெற்ற சீதக் காதி, இரக்க உணர்வு மிக்கவராகத் திகழ்ந்தார். கொடை கொடுக்கும் தன்மை இவருக்கு இயல்பாக வாய்க்கப் பெற்ற உயர்குணச் சிறப்பாகும்.

கீழக்கரை வந்த மார்க்க மாமேதை சதக்கத்துல்லா அவர்களின் அன்பிற்குரியவரானார். அவரின் ஆன் மீக மாணவராகவும் விளங்கினார்.

அப்பா

நவரத்தின வணிகத்தில் சீதக்காதி

இவரு உலகின் நாலா பாகங்களுக்கும் சென்று வந்தன. இவரது செல்வ வளமும், கொடைத் திறமும் தமிழகத்தில் மட்டுமல்லாது தமிழகத்திற்கு அப்பாலும் பரவி இருந்

தன.

பெரும் பொருள் ஈட்டினார். டைய வணிகக் கப்பல்கள்

இவரது சிறப்பை சதக்கத்துல்லா அப்பா மூலம் அறிந்த சக்கரவர்த்தி ஒளரங்களிப் ஆலம்கீர் இவரை வங் ஆளுநராக நியமித் தார். அங்கு சென்ற சீதக்காதி ஓராண் டிற்குள்ளாக அங்குள்ள சூழல் பிடிக்கா மல் கீழக்கரை திரும்பினார்.

காள நாட்டின்

சீறாப்புராணம்

பின்னர் சிறிது காலம் சேதுபதி மன்னரின் அமைச்சராக அமர்ந்து பணி யாற்றினார். அப்போது தான் உமறுப் புலவரின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது. அவரைச் சீறாப்புராணக் காப்பியம் பாடத் தூண்டினார். அந் நூலிற்காக பெருமானாரின் பெரு வாழ்வை சதக்கத்துல்லா அப்பா அவர் களைக் கொண்டு உரைக்கச் செய்தார். நூல் விரைந்து உருவாக வேண்டிய பொருளுதவிகளை உமறுக்கு வழங்கி

னார்.

மார்க்கத்தின்மீது அளவிலாப் பற்றுக்

கொண்டிருந்த சீதக்காதி தமிழ்ப் புலவர்கள் மீது அளவிலா அன்பு கொண்டிருந்தார். தம்மை நாடி வரும் புலவர்களை ஆதரித்துப் போற்று வதைத் தம் கடமையாகக் கருதினார். ஏழை எளியவர்க்கு இல்லை என்று கூறாது வாரி வழங்கும் வள்ளலாக விளங்கினார். இவர் கீழக்கரையில் காலமானதும் தாயை இழந்த தனயர் களைப் போல புலவர்கள் ஆயினர்.

இவர் இறக்குமுன் தம் அடக்கவிடத் தில் கட்டிடம் ஏதும் கட்ட வேண்டாம் என்றும், தம் கப்ர் மீது முளைக்கும் புல் பூண்டுகளை ஆடு மாடுகள் தின்பதை யே தாம் விரும்புவதாகவும் கூறினார். இறந்தும் பிற உயிர்களுக்குப் பயன்பட எண்ணிய அவரது கொடை உணர்வு என்றும் போற்றுதற்கு உரியதாகும்.

சீறாப்புராணம்: பெருமானார் (ஸல்) அவர்களின் பெருவாழ்வைத் தீஞ் சுவைப் பாக்களால் கூறும் தீந்தமிழ்க் காப்பியம் சீறாப்புராணம் ஆகும். மார்க்க மேதை சதக்கத்துல்லா அப்பா அவர்கள் உரை வழங்க, உமறுப்புலவ ரால் இயற்றப்பட்ட தீஞ்சுவைக் காவிய மே சீறாப்புராணம். இக்காப்பியத் தைப் பாடத் தூண்டியவரும் கொடை நல்கியவரும் சீதக்காதியாவார்.