பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

F (10

இவர் அரசராக இருந்தாலும், அரசு கருவூலத்திலிருந்து ஒரு பைசாவைக் கூட எடுத்துப் பயன்படுத்தியதில்லை. இறையருளால் போர்க்கவசம் செய்யும் தி ற ன் பெற்றவராக இருந்தார். எனவே, போர்க்கவசம் செய்து விற்று, அதில் ஒரு பகுதியைத் தமக்காகவும், மறுபாதியை ஏ ைழ எளியவர்க்குத் தானம் செய்தும் வாழ்ந்தார்.

இவர் தம் வாழ்நாளில் பைத்துல் முகத்தளை நிர்மாணித்துப் பள்ளி வாசல் கட்ட முயன்றார். அம்முயற்சி வெற்றிபெறவில்லை. இவர் புத்திரர் சுலைமான் (அலை) அவர்கள் இப் பணியை நிறைவு செய்தார்கள்.

இறைவனை மிக அதிகமாக வணங்கி வந்த தாவூத் (அலை) தம் நூறாவது வயதில் காலமானார். இவரது உடல் பைத்துல் முகத்தஸ் அருகில், ஒரு குன் றில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தாஜ்மஹல் முகலாயப் பேரரசர் ஷாஜஹான் தம் அன்பு மனைவி மும் தாஸ் நினைவாக எழுப்பிய கல்லறைக் கட்டடமே தாஜ்மஹல். யமுனை நதிக் கரையில் ஆக்ரா கோட்டைக்கருகில் இவ்வெழில் கட்டிடங்களில் எல்லாம் அழகு மிக்கதாகக் கருதப்படுகிறது. உலக அதிசயங்களில் ஒன்றாகவும் எண் ணப்படுகிறது.

தாஜ்மஹல் 95 மீட்டர் சதுரப் பரப் புள்ள மேடை மீது 68 சதுர மீட்டர் கொண்ட கட்டிடமாக உருவாக்கப்பட் டுள்ளது. இம்மேடையின் நான்கு மூலை களில் சற்றே வெளிப்புறமாகச் சாய்ந்த மினராக்கள் நான்கு அமைக்கப்பட்டுள் ளன. தாஜ்மஹலின் வெளிப்புறம் முழு மையும் வெண்ணிறச் சலவைக் கற் களால் பதிக்கப்பட்டுள்ளது. உட்புறத் தில் பல்வேறு நாடுகளிலிருந்து தருவிக் கப்பட்ட பல வண்ணக் கற்கள் பதிக்கப் பட்டுள்ளன. இவை நாற்பது வகைகள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

திப்பு சுல்தான்

த ஜ் ம ஹ ல் இரு மாடிகளைக் கொண்டதாகும். நான்கு முனைகளில் சிறு கோபுரங்கள் நான்கு அமைந்துள் ளன. மண்டபத்தின் மத்தியில் சமாதி போல் அமைக்கப்பட்டுள்ளது. இது போலியான சமாதியாகும். உண்மைச் சமாதி அதற்கு நேர்கீழாக அமைந்துள் ளது. அவ்விடத்தில் ஹிஜிரி 1040 மறைந்த மும்தாஜ் மஹல் என அழைக் கப்பட்ட அர்ஜுமந்த பானுபேகத்தின் அடக்கத்தலம் இது என பாரசீக மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் தலைப்பகுதியில் குர்ஆன் ஆயத் பொறிக்கப்பட்டு உள்ளது. தாஜ்மஹ லைச் சுற்றிலும் அழகுமிகு பூங்கா வண்ணப் பூக்களோடு காட்சி தருகிறது. நீருற்றுகள் பல அமைந்துள்ளன. தாஜ் மஹலின் முன்புறம் சலவைக் கல்லால் ஆன நீர்த்தடாகமும் நீருற்றுக்களோடு அமைந்துள்ளன. இத் தடாகத்தின் தெளிந்த நீரில் தாஜ்மஹலின் தோற் றம் அழகாகவும் தெளிவாகவும் தெரி வது கண்கொள்ளாக் காட்சியாகும். இதன் இடப்புறத்தில் அழகிய மசூதியும்

உண்டு.

இதனை உள்நாடு மற்றும் துருக்கி போன்ற வெளிநாட்டுக் கட்டிடக்கலை நிபுணர்களும் பங்கு கொண்டு உருவாக் கினர். இதனைக் கட்டிமுடிக்க இருபதி னாயிரம் ஆட்கள் இருபத்திரண்டு ஆண்டுகள் உழைத்துள்ளனர். அக்கால மதிப்புப்படி சுமார் ஒன்றரைக்கோடி ரூபாய் செலவாகியுள்ளது. நி லா வெளிச்சத்தில் தாஜ்மஹல் கண்கொள் ளாக் காட்சியாக இருக்கும்.

திப்பு சுல்தான்: அன்னியர் ஆதிக் கத்தை எதிர்த்துப் போராடிய மன்னர் திப்பு சுல்தான் ஆவார். இவர் 1750 -ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் நாள் பெங்களுருக்கு அருகேயுள்ள தேவ எாலி எனும் ஊரில் பிறத்தார். இவர்