பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திப்பு சுல்தான்

தந்தை ஹைதர் அலி, இவரைப் போல வே அன்னியர் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய மாபெரும் வீரராவார்.

திப்பு ஷா வலியுல்லாஹ் மீது கொண் டிருந்த அன்பின் விளைவாக, இவர் பெற்றோர் இவருக்குத் திப்பு' எனப் பெயரிட்டனர். திப்பு இளம் வயதி லேயே அறிவு வேட்கையும், வீர உணர் வும் மிக்கவராக விளங்கினார். அரபி, பார்ஸி, உருது, கன்னட மொழிகளில் நல்ல தேர்ச்சி பெற்ற திப்பு திறம்பட இராணுவப் பயிற்சியும் பெற்றார்.

பதினேழு வயதிலேயே இராணுவ அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் மங்களுரைக் கைப்பற்றி, அங் கிருந்து ஆங்கிலப் படையினரை சென் னைக்கு விரட்டியடித்தார். இந்த வெற்றி மூலம் ஆங்கிலப்படையினருக்கு இவர் சிம்மசொப்பனம் ஆனார். அதன் பின் மேலைக் கடற்கரையிலுள்ள மற் றொரு முக்கிய இடமான பொன்னானி யை முற்றுகையிட்டார். அப்போது இவர் தந்தை ஹைதர் அலி இறக்கவே இவர் அரியணை ஏறினார். அப்போது இவரது ஆ ட் சி ப் பகு தி வடக்கே கிருஷ்ணா நதியும், மேற்கே அரபிக்கட லும், கிழக்கே கிழக்குத் தொடர்ச்சி மலையும், தெற்கே திருவாங்கூரும் கொண்டதாக அமைந்திருந்தது.

ஹைதர் அலி இறந்ததால், திப்புவை எளிதாக வென்று விடலாம் என ஆங்கி

லேயர் எண்ணினர். ஆனால் திப்பு பெரும் படையுடன் அவர்கள் மீது போர்த் தாக்குதல் நடத்தினார்.

தோல்வியடைந்த ஆங்கிலேயர்களைக் கைது செய்து சிறையிலிட்டார். அவர் களுள் ஆங்கிலப் படைத் தளபதி மாத் திவ்ஸ்-ம் ஒருவராவார். இவரை எதிர்த்து வெற்றிபெறமுடியாது என உணர்ந்த ஆங்கிலேயர் இவரோடு உடன்படிக்கை செய்து கொண்டனர். அதன்படி சிறை வைக்கப்பட்டிருந்த

I () I.

தளபதி உட்பட ஆங்கிலப்படையினரை திப்பு சுல்தான் விடுதலை செய்தார்.

இவர் 1789ஆம் ஆண்டில் திருவாங் கூர் மீது படையெடுத்தார். இதை அறவே விரும்பாத ஆங்கிலேயர் உடன் படிக்கைக்கு எதிராக திப்பு சுல்தான் நடத்து கொள்வதாகக் குற்றம் சாட்டி னர். தங்கள் ஒப்பந்தத்தையும் குறித் துக் கொண்டனர். இதன் விளைவாக நடந்த போரில் திப்பு சுல்தான் தோல்வி யடைந்தார். அதன்பின் சீரங்கப் பட்டி ணத்தில் இருந்த திப்பு சுல்தான் அரண் மனையை ஆங்கிலேயத் தளபதி காரன் வாலிஸ் முற்றுகை இட்டார். முற்றுகை யின் கடுமையைக் கண்ட திப்பு ஆங்கி லேயத் தளபதியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன் பயனாகத் திப்பு வின் ஆட்சிப் பகுதியில் பாதியும் முப்பது இலட்சம் ரூபாய் இழப்பீடும் தருவதாக ஒப்பந்தம் ஏற்பட்டது. பணம் தரும் வரையில் தம் இரு ஆண்மக்களையும் பணயமாக ஆங்கிலேயரிடம் ஒப்படைத் தார் திப்பு சுல்தான். சிறிது காலத்திற் குள் பயணத்தொகையைச் செலுத்தித் தம் மக்களை மீட்டுக் கொண்டார்.

இதனால் மிகவும் வேதனைப்பட்ட திப்பு சுல்தான் ஆங்கிலேயரை ஒழிக்க மீண்டும் முயற்சிகளை மேற்கொள்ள லானார். இதை அன்னியரை எதிர்க் கும் போராகக் கருதாது ஜிஹாது' (மார்க்கப்) போராகவே கருதினார். ஆங்கிலேயர்களை வெற்றிகொள்ளும் வரை, பஞ்சணையில் படுப்பதில்லை எனச் சபதமேற்றார். கூடாரத்திற்குப் பயன்படும் ஒருவகை முரட்டுத் துணி யின் மீதே அன்று முதல் உறங்கி வந் தாா.

விரைவிலேயே ஃபிரெஞ்சுக்காரர்களின் உதவியுடன் ஆங்கிலேயர்களை விரட்டி யடிக்க முயன்றார். இவர் துணைவர் களான திவான் பூரணைய்யா, மீர் சாதிக், மீர்குலாம் ஆகியோர் இரகசிய