பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 0.2

மாக ஆங்கிலேயருடன் தொடர்பு வைத்துக்கொண்டு, திப்பு சுல்தானுக்

குத் துரோகம் இழைத்தனர். அவர்கள் தீட்டிய சதித் திட்டத்தின் விளைவாக ஆங்கிலேயர் சீரங்கப்பட்டணக் கோட் டையை முற்றுகையிட்டனர். அப்போது திப்பு சுல்தான் உணவு உண்டு கொண் டிருந்தார். திடீரென முற்றுகையிட்ட செய்தியறிந்து போர்க்களம் புகுந்தார். வீரப்போரிட்டு போர்க்களத்திலேயே இறந்தார். இவரது உடல் இவர் தந்தை யின் அடக்கவிடத்திற்கு அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

இஸ்லாமிய மார்க்கப் பற்று மிக்கவ ராக விளங்கியவர் திப்பு சுல்தான். கற் றறிந்த அறிஞர்களையும், கலைஞர் களையும் மத, இன, சாதி, வேற்றுமை இன்றி ஆதரித்துப் போற்றினார். இஸ் லாமிய, இந்து சமய புனிதவிடங்களுக்கு நிறைய மானியம் வழங்கினார். மது விலக்குக் கொண்டுவந்தார். ஜமீன்தார் முறையை நீக்கினார். உழுபவர்களுக்கே நிலம் சொந்தம் என்ற கொள்கையைக் கடைப்பிடித்தார். பட்டுத் தொழில் வளர்ச்சிக்கு அடிகோலினார். வேளாண் மை செழிக்க காவிரி மீது அணைகட் டும் பணியைத் துவங்கினார். கிருஷ்ண ராஜ என்று புகழ்பெற்ற அணைக்கட்டுக்கு இதுவே முன்னோடி யாகும்.

சாகர்’

தீன் பிரதிபலன்’ எனும் பொருளு டையது தீன்' எனும் அரபுச் சொல். இதற்கு வாழ்க்கைச் சட்டம், வாழ்க் கை நெறி, மார்க்கம் எனும் வெவ்வேறு பொருள்களும் உண்டு. பொதுவாக "தீன்' என்பதற்கு இஸ்லாமிய மார்க்கம் என்பதே திரண்ட பொருளாகும். "லகும் தீனுகும் வலியதீன் என வரும் திருமறை வாசகத்துக்கு மார்க்கம் உங்களுக்கு, என் மார்க்கம்

என்பது பொருளாகும்.

'உங்கள்

燃 簽

எனக்கு

துருக்கி

துஆ: 'து'ஆ' எனும் அரபுச் சொல் லுக்கு இறைஞ்சுதல்' என்பது பொரு ளாகும். இதனைத் தமிழில் இறை வேட்டல்' என்று கூறலாம். இரு கர மேத்தி இறைவனின் அருள் வேண்டிச் செய்யும் துஆக்கள் இறைவனுக்கு உவப்பைத் தருகின்றன. திருமறையின் முதல் அத்தியாயமான ஸ்குரத்துல் பாத்திஹாவு’க்கு ஸ்குரத்துல் துஆ' என்ற வேறொரு பெயரும் உண்டு. இதி லிருந்து துஆவுக்கு இறைமறை தரும் சிறப்பை நன்கு உணரலாம்.

ஒர்மையுடன் இறைவனிடம் துஆக் கேட்க வேண்டும். நியாயமான துஆக்கள் இறைவனால் ஏற்றுக்கொள் ளப்படுகின்றன. அவை நிறைவேற்றப்

1. இr

படுகின்றன.

துருக்கர்: துருக்கி நாட்டைச் சேர்ந் தவர்கள் துருக்கியவர் ஆவர். இவர் களே துருக்கர் என்ற பெயரில் மருஉச் சொல்லால் அழைக்கப்படுகின்றனர். 'துருக்கர் என்ற சொல்லே தமிழ் இலக்கியங்களிலும் இடம் பெற்றுள் ளது.

இச்சொல் மேலும் மாற்றமடைந்து 'துலுக்கர் என ஆகியுள்ளது. தமிழகப் பாமர மக்கள் உருது மொழி பேசும் முஸ்லிம் மக்களைத் துலுக்கர் என்ற சொல்லால் அழைக்கின்றனர். உருது மொழியும் துலுக்கர் மொழி என்றே குறிக்கப்படுகிறது.

துருக்கி: ஐரோப்பாவையும் ஆசியா வையும் இணைக்கும் நாடாக துருக்கி அமைந்து உள்ளது. துருக்கி நாட்டின் ஒரு பகுதி ஐரோப்பாவிலும், மற்றொரு பகுதி ஆசியாவிலுமாக அமைந்துள்ளது. மர்மரா, பாஸ்பரஸ் கடல்கள் ஆசிய, ஐரோப்பியத் துருக்கியப் பகுதிகளைப் பிரிக்கின்றன. வடக்கே கருங்கடலும் வடமேற்கே ரஷியாவின் காக்கசும்

கிழக்கே ஈரானும் தெற்கே சிரியா,