பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 0.4

தில் எச்சிலை

இறங்கியது. கியது.

உமிழ்ந்தார். விஷம் வலி அடியோடு நீங்

தேடிவந்த மக்கா குறைஷிகள் குகையின் வாயிலை அடைந்தனர். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் பெருமானார் அவர் களை நோக்கி, நாம் இருவர் இங்கு இருப்பதை எதிரிகள் கண்டுபிடித்து விடு வார்களோ?' என்றார். உடனே நாய கத்திருமேனி அவர்கள் நாம் இருவர் மட்டும் அல்ல, அல்லாஹ்வையும் சேர்த்து மூவர் உள்ளோம் என்று பதில் கூறினார்.

அவர்களைத்

எதிரிகள் குகையின் வாயிலருகே வந்த போது, அங்கே திடீரென ஒரு சிலந்தி வலை தோற்றம் தந்தது. எதிரிகள் இச் சிலந்தி வலை முஹம்மது பிறப்புக்கும் முன்பு தோன்றியதுபோல் காணப்படு கிறது. இச்சிலந்தி வலையைச் சேதப் படுத்தாமல் யாரும் உள்ளே சென்றி ருக்க முடியாது'என எண்ணியவர்களாய் அவ்விடம் விட்டு அகன்றனர். அப் போது அக்குகையினுள்ளிருந்து இரண்டு

புறாக்கள் வெளிப்பட்டன. ஆட்கள் யாரும் உள்ளேயிருப்பின் இப்புறாக்கள் குகையில் இருந்திருக்க முடியாது.

யாரும் இல்லாததால் இவை அங்கிருந்து வெளிப்படுகின்றன. எனக் கருதி வந்த வழியே திரும்பிச் சென்றனர்.

நான்காம் நாள் எதிரிகளின் தேடும் வேட்டை ஓய்ந்தது. அதன்பின் அண் ணல் அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர் களும் குகையினின்றும் வெளிப்பட்ட னர். பின்னர் யத்ரிப் நகர் நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தனர்.

இவ்வாறு மக்காவிலிருந்து மதினா

நோக்கிப்புறப்பட்ட நாளி லி ரு ந் தே இஸ்லாமிய ஆண்டான ஹிஜ்ரி தொடங் குகிறது.

தெளராத்: இறைவனால் மூ லா (அலை) அவர்கட்கு வழங்கப்பட்ட

நஸ்ரூல் இஸ்லாம்

வேதம் தெளராத் ஆகும். முஸா (அலை) யூத இனத்தவராதலால் இவ் வேதம் யூத வேதமாக அமைந்தது. இவ் வேதத்தை லினாய் மலையில் இறை வன் தன் கரத்தால் அமைத்தான் என்றும் நம்பப்படுகிறது. இவ்வேதத் தின் கருப்பொருளாக அமைந்திருப்பது 'பத்துக் கட்டளைகள் ஆகும்.

தெளராத் வேதம் மூஸா (அலை) அவர்களின் தாய்மொழியான ஹீப்ரு மொழியிலேயே இருந்தது. இச்சொல் லுக்குச் சட்டம்' எனப் பொருள் கூறப் படுகிறது. மூஸா (அலை) அவர்களின் வழி இறையைப் பின்பற்றும் யூத மக்க ளுக்கு வாழ்வியல் சட்டங்களை வரை யறுத்துக் கூறும் வேதமாக இஃது கருதப்படுகிறது.

இவ்வேதம் கி.மு. 607வரை ஜெரு சலத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது. அதன்பின் ஏற்பட்ட போரில் ஜெரு சலம் அழிக்கப்பட்டது. அப்போது தெளராத் வேதத்தின் மூலப்படி எரிக் கப்பட்டது. அதன்பின், இவ்வேதம் பற்றி கிரேக்க மொழியில் பெயர்க்கப் பட்டிருந்த பகுதிகளையும், பலருடைய நினைவுகளிலிருந்தவற்றையும் திரட்டி னர். இவ்வாறு மீண்டும் தெளராத் வேதம் உருவாக்கப்பட்டது. எனவே தற்போது பாடபேதத்தோடு கூடிய மூன்று வகையான வேதங்கள் யூதர் களால் கையாளப்பட்டு வருகின்றன.

பைபிளில் உள்ள பழைய ஏற்பாடே தெளராத்தின் வேதம் எனக் கூறப்படு கிறது.

கஸ்ருல் இஸ்லாம்: எழுபது ஆண்டு கட்கு முன்பு புத்துணர்வூட்டும் புது மைக் கவிதைகள் பலவற்றை இயற்றிப் புகழ் பெற்ற வங்கக் கவிஞர் காஜி நஸ்ருல் இஸ்லாம். இவர் தம் எழுச்சி மிகு கவிதைகளால் புரட்சிக் கவிஞர் எனும் புகழாரம் பெற்றவர்.