பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I l ()

பயான்: இஸ்லாமியப் பொருள் பற்றி அல்லது எந்த ஒரு விஷயம் பற்றி தெளிவு படுத்துவதே பயான்' என்று கூறப்படுகிறது. பயான் செய்வோர் தெளிந்த அறிவும், சொல்லாற்றலும் மிக்கவராக இருத்தல் அவசியம். இஸ் லாமிய அறிவு நிரம்பப் பெற்றிருத்தல்

வேண்டும்.

கேட்போர் தெளிவு பெறுவதோடு, தொடர்ந்து சிந்திக்கத் தூண்டும் முறை யில் பயான் அமைதல் வேண்டும். இஃது பேச்சாக அன்றி எழுத்தின் வழி விளக்க வுரையாகவும் அமையலாம். எனவே தான், திருக்குர்ஆன் விளக்கவுரைகள் 'பயானுல் குர்ஆன் என்று அழைக்கப் படுகின்றன.

பர்தா இச்சொல் பார்ஸிச் சொல் லாகும். இதற்குத் திரை' என்று பொருள். அரபு மொழியில் இதற்கு

'ஹிஜாப் என்பர். இது பொதுப்பெய ராக இருப்பினும் பெண்கள் அணியும் திரையையே குறிக்கும் சொல்லாகப் பயன்பட்டு வருகிறது. .ெ ப ண் க ள் பர்தா அணியும் பழக்கம் உலகில் ஐயா யிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது.

கவர்ச்சியும் கிளர்ந்

பெண்களின் அழகும் ஆண்களின் உணர்வுகளைக் தெழச் செய்கிறது. இதனால் ஆண்கள் ஒழுக்கவியல் நெறிக்குப் புறம்பாக தடம்புரள நேர்கிறது. எ ரி தி ல் உணர்ச்சி வயப்படும் பெண்டிரும் இத னால் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்ற னர். எ ன வே தான் பஞ்சையும் நெருப்பையும் அருகருகே வைப்பது அவை பற்றி எரிய ஏதுவாகிவிடும். இத னாலேயே ஆடவர் முன்பு பெண்டிர் தங்கள் உடல் அழகை, கவர்ச்சியைக் காட்டும் உறுப்புகளைத் துணியால் மூடி மறைத்துக் கொள்ள வேண்டும் என இஸ்லாம் போதிக்கிறது. இஸ்லா மிய முறையில் பெண்கள் அணியும்

ஃபர்லு

பர்தா ஆண்களைக் காக்கும் கேடய மாகவும் அமைகிறது.

பெருமானார் (ஸல்) அவர்கள் காலத் திற்குச் சற்று முன்புவரை பழங்காலத் தில் பேணுதலான பர்தா முறை இல் லாதிருந்தது. இதனால் ஒழுக்க வாழ் வும் சீரழிந்திருந்தது. எனவேதான், அண்ணலார் (ஸல்) தீன் நெறிவழி ஒழுக்கத்தைப் பேணிப் பாதுகாக்க பர்தா முறையை வலியுறுத்தி நிலை ந ா ட் டி ன 片 '...(பெண்களிடம்) யாதொரு பொருளை நீங்கள் கேட்கும் படி நேரிட்டால் நீங்கள் திரைக்கு அப்பால் இருந்துகொண்டே அவர்களி டம் கேளுங்கள். இது உங்கள் இருதயங் களையும் அவர்கள் இருதயங்களையும் பரிசுத்தமாக்கி வைக்கும். ’’ (33:53) என அல்லாஹ் தன் திருமறையில் கூறி

யுள்ளான். இதிலிருந்து ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே திரை இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

பெண்கள் ஆண்கள் மத்தியில் நடமாட வேண்டிய கட்டாயம் ஏற்படின் பெண் கள் பர்தா அணிந்தே செல்ல வேண்டும் என்பதும் கட்டாயமாகிறது.

உள்ளங்காலிலிருந்து உச்சந்தலை வரை உடையால் பெண் தன் உடலை மறைத்துக்கொள்வதே சரியான பர்தா முறையாகும்.

ஃபர்லு: இதற்குக் கட்டாயக் கடமை' என்பது பொருளாகும். இஸ்லாமிய மார்க்க நெறிகளில் சிலவற்றைக் கட்டாயம் கடைப்பிடித்து ஒ ழு க வேண்டும். இவை பர்லாகும். சான் றாக, இஸ்லாத்தின் ஐ ம் பெ ரு ம் கடமைகளான இறைநம்பிக்கையாகிய கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகியவை கட்டாயக் கடமை களாகும். இவை ஃபர்லுகளாகும்.

ஃபர்லு இரு வகைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று, ஃபர்லு