பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 30

பாங்கு சொல்வதில்லை. இதற்குப் பின் இவர் தவிர்க்க முடியா நிலை

யில் இரு மு ைற மட்டுமே பாங்கு சொல்லியுள்ளார். ஒரு சமயம் உமர் (ரலி) ஜெருசலம் வந்திருந்தபோது அ வ ரி ன் வேண்டுகோளுக்கிணங்க ளுஹர் தொழுகைக்குப் பாங்கு சொன் னார். மற்றொரு சமயம் மதீனா வந் திருந்தபோது அண்ணலாரின் பேரரர் கள் ஹஸன் (ரலி), ஹாஸைன் (ரலி) வேண்டுகோளுக்கிணங்க பஜ்ர் தொழு கைக்கு பாங்கு சொன்னார். அதன்பின் அவர்கள் மறைவுவரை பாங்கு சொல் லவே இல்லை.

பின்னர் திமிஷ்க் சென்று வாழ்ந்த பிலால் (ரலி) ஹிஜ்ரி 20ஆம் ஆண்டில் காலமானார். அவரது உடல் அங்குள்ள பாபுஸ் ஸ்கீரு கோட்டை வாயிலருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்று வரை நினைவுக் கட்டிடம் ஏதுமின்றி தரையாகவே உள்ளது. அடையாளத் துக்கென அதன்மீது துணி போர்த்தப் பட்டுள்ளது.

பீர்முஹம்மது அப்பா: இஸ்லாமியத் தமிழ் மெய்ஞ்ஞான சூஃபிக் கவிஞர் களிலே தலையாயவராக விளங்குபவர் பீர்முஹம்மது அப்பா அவர்களாவார். இவர் தென்காசியில் பிறந்தார். தந்தையார் பெயர் சிறு மலுக்கர் என்பதாகும். இவரை சதக்கத்துல்லா அப்பா சந்தித்த குறிப்பிலிருந்து இவர் கள் இருவரும் ஒரே காலத்தில் வாழ்ந்த தாகத் தெரிகிறது.

இவர் மலையாளக் காடுகளில் சுமார் 95 ஆண்டுக்காலம் தவமிருந்ததாகக் கூறப்படுகிறது. பின் 15 ஆண்டுக்காலம் யானை மலையில் கடுந்தவம் செய்த தாகவும் கூறப்படுகிறது. இன்று அங் குள்ள ஒரு மேட்டுப்பகுதி பீர்மேடு" என்ற பெயராலேயே அழைக்கப்படு கிறது. திருவாங்கூர் மன்னர் இவர்

பைத்துல் மால

பெருமையை உணர்ந்து இவரை உப சரித்ததாகக் குறிப்புகள் உள்ளன.

தவ வாழ்வை விடுத்து திருமணம் செய்துகொண்டு தக்கலையில் வாழ்ந்து வந்தார். அப்போது அவர் நெசவுத் தொழில் செய்து வருமானம் தேடி வாழ்ந்தார். அப்போதுதான் சதக்கத் துல்லா அப்பா அவர்கள், இவரை நேரில் கண்டு இவரின் பெருமையை அறிந்து சென்றார். இவர் உடல் தக்கலையில் அடக்கம் செய்யப்பட்டுள் ளது. இவரது அடக்கவிடத்தைச் சுற்றி நினைவிடமாக தர்கா ஒன்று உருவாக் கப்பட்டுள்ளது. அங்கு இவரது மறைவு நாளான ரஜப் 14இல் உர்ஸ் விழா வாக நடத்தப்படுகிறது. அப்போது இரவு முழுவதும் இவரது அடக்கவிடத் தைச் சுற்றி அமர்ந்து இவர் இயற்றிய ஞானப்புகழ்ச்சி நூலை சந்த இசை யோடு பாடுகின்றனர். இது வேறெங் கும் காணாத சிறப்பு நிகழ்ச்சியாகும். இவர்கள் சுமார் பதினெட்டாயிரம் மெய்ஞ்ஞானப் பாடல்களை எழுதியுள் ளார். அவற்றுள் திருநெறி நீதம், மஃரிபத்து மாலை, பிஸ்மில் குறம், ஞானப் புகழ்ச்சி, ச ர நூ ல், ஞான ரத்தினக் குறவஞ்சி ஆகியன குறிப் பிடத்தக்கனவாகும். இ வ. ர் க ளி ன் பாடல்கள் சிலவற்றுக்கு செவ்வல் மாநகரத்தைச் சேர்ந்த நெய்னார் முஹம்மதுப் புலவர் என்பவர் உரை எழுதியுள்ளார். இவரது மெய்ஞ்ஞானப் பாடல்களைப் பற்றிய ஆய்வுக் கருத் தரங்குகள் நடந்துள்ளன. ஆய்வுத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.

பைத்துல் மால்: மக்களின் நன்மைக் கென மக்களிடமிருந்து திரட்டப்படும் பொதுப்பணம் அல்லது பொருள் சேமிப்பு பைத்துல் மால்' என அழைக் கப்படுகிறது.

இஸ்லாமிய வரலாற்றில் இத்தகைய பைத்துல் மாலை உருவாக்கிச் செயல்