பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

இறையருள் பெற்ற இடம். இங்குதான் இப்ராஹீம் (அலை), இஸ்ஹாக்(அலை) தாவூது (அலை), கலைமான் (அலை), மர்யம் நாச்சியார் ஆகியோரின் நல் லுடல்கள் அடக்கப்பட்டுள்ளன. இறுதி நாளின் தீர்ப்புக்கான மஹ்ஷர் பெரு வெளி இங்கேதான் அமையும் எனக் கூறப்படுகிறது.

மிஃறாஜ் அன்று மஸ்ஜிதுல் ஹரமி லிருந்து இங்குள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வுக்கு அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வரப்பட்டு, பின் விண்ணுலகு அழைத்துச் செல்லப்பட் டார்கள். மஸ்ஜிதுல் அக்ஸா என்பது பைத்துல் முகத்தலே ஆகும்.

இங்குள்ள மஸ்ஜிதுல் அக்ஸா எனும் பைத்துல் முகத்தஸ் பள்ளி முஸ்லிம் களுக்கும், மாதாகோயில் கிருஸ்தவர் களுக்கும், இங்குள்ள அழுகைச் சுவர்' யூதர்களுக்கும் புனித இடங்களாக அமைந்துள்ளன.

மக்கா: இஸ்லாத்தின் மிகப்பெரும் புனித நகராக அமைந்திருப்பது மக்கா வாகும். இது அரேபியா நாட்டில் ஹிஜாஸ் மாநிலத்தில் அமைந்துள்ளது. மக்கா என்ற சொல் மிக்ராஃப்' என்ற சொல்லின் திரிபு ஆகும். இதன் பொருள் தொழுமிடம்' என்பதாகும்.

இறை ஆணைப்படி ஆதி மனிதர் ஆதம் அவர்கள் வல்ல அல்லாஹ்வை வணங்க முதல் வணக்கத்தலம் இங்கே தான் அமைந்திருந்தது. அதுவே கஃபத் துல்லா எனும் இறையில்லம்,

அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க இப்ராஹீம் (அலை), தம் மனைவி ஹாஜராவையும், தம் சின்னஞ்சிறு

பாலகன் இஸ்மாயிலையும் இங்குதான் கொண்டுவந்து விட்டுச் சென்றார். அதன் பின்னரே இங்கு மக்கள் குடியேற மக்கா நகர் உருவாயிற்று. இங்குதான்

மக்கா

இறையருளால் பொங்கிய ஜம்ஜம்

கிணறு உள்ளது.

கஃபாவை மீண்டும் புனரமைத்த

வர் இப்ராஹீம் (அலை) ஆவார்.

மக்கள் இங்கு வந்து ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற இறைவ னின் ஏவலை எடுத்துரைத்தார். இதன் பிறகு ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கள் நாலா திக்கிலிருந்தும் இங்கே வந்து செல்லலாயினர். மக்கா நகர் மேலும் வளர்ந்து வளமடைந்தது. மக்கள் போற்றும் புனித நகரமாக ஹரமாக உருவாகியது.

பண்டையக் காலத்தில் மக்கா நகர் வணிகக் கேந்திரமாகவும் விளங்கியது. வணிகர்கள் எத்திக்கை நோக்கிச் சென் றாலும் இந்நகர் வந்தே செல்வது வழக்கம். இவ்வாறு நகருள் வரும் வணிகர்களிடம் நுழைவுக்கட்டணமும் வசூலிக்கப்பட்டது. மக்கா செல்வச் செழிப்புள்ள நகரமாக விளங்கியது. இங்குக் குறைஷி இன மக்களே பெரும் பான்மையினராக இருந்தனர். இத னால் மக்கா நகரம் அவர்களின் ஆளு கையின் கீழ் இருந்துவந்தது.

அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில்தான் பிறந்து வளர்ந்தார்கள். நபித்துவம் பெற்ற பிறகு சில ஆண்டுகள் மக்காவில் இருந்து .ெ க | ண் டு இரகசியமாக இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து வந் தார்கள். இக்காலத்தில் குறைஷிக் காபிர்களால் பெருந்துன்ப துயரங் களுக்கு ஆளானார்கள். அவர்களிட மிருந்து தப்ப அபூபக்ர் (ரலி) அவர்களு டன் மக்காவிட்டு மதீனா சென்றார்.

பின், எட்டாண்டுகள் கழித்து மாநபி மக்காவை வெற்றி கொண்டார். அப்போது அவர் மக்களை நோக்கி வானங்களையும் பூமியையும் படைத்த வல்ல அல்லாஹ் மக்கா மாநகரை