பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 3 ()

மஹர்: நிக்காஹ்வின்போது மண மகன் மணமகளுக்கு வழங்கும் திருமணக் கட்டணம் மஹர் என்று அழைக்கப்படு கிறது. மணமகன் மணமகளுக்கு மஹர் வழங்கவேண்டுமெனத் திருமறையில் அல்லாஹ் தெளிவாகக் கூறியுள்ளான். இந்தத் தொகையை வழங்குவதன் மூலம் மணமகளின் தகுதியை மண உயர்த்துகிறான். இந் த த் குறைந்த பட்சம் பத்து மதிப்புடையதாக இருக்க வேண்டும். இதற்கு மே ற் ப ட் ட தொகையை தகுதிக்கும், செல்வ வளத்திற்குமேற்ப வழங்கலாம். மணமகள் விரும்பிச் சம்மதித்தால் மஹரை கடன் சொல்லி நிக்காஹ் செய்து கொள்ளலாம். இது கூடியவரை தவிர்க்கப்படுவது நல்லது. நிக்காஹ் வின் போதே மஹர்த் தொகை கொடு த்து விடுவது உத்தமமாகும்.

இதற்கு மாறாக பெண் விட்டாரிட மிருந்து கைக்கூலி எனும் வரதட்சணை வாங்குவது இஸ்லாமிய நெறிக்கு முற்றி லும் புறம்பானதாகும்.

மகன் தொகை

நாணய

மணமகன்

மி.ராஜ்: அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விண்ணுலகு சென்று

திரும்பியதைக் குறிப்பது மிஃராஜ் எனும் சொல். இதற்கு உயருதல்' என்பது பொருளாகும். பெருமானா

ரின் விண்னேற்றம் ரஜப் மாதம் 27 -ஆம் தேதி நடைபெற்றது. அன்று இரவு ஜிப்ரீல் (அலை) அல்லாஹ்வைச்

சந்திக்க அண்ணலாரை அழைத்துச்

சென்ற சம்பவத்தை விவரிப்பதே

மிஃராஜ்.

பெருமானார் (ஸல்) அவர்கள்

ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் புராக் கின் மீது ஏறி முதலில் பைத்துல் முகத் திஸ் சென்றனர். அங்கே தொழுது விட்டு, மீண்டும் விண்ணகப் பயணத் தைத் தொடர்ந்தார். அல்லாஹ்வை

uðubt iff

அணுகியபோது அவனது பேரொளி அண்ணலாரை மயக்கமுறச் செய்து விட்டது. பின்னர் இறை ஆணைப்படி சொர்க்கம், நரகங்களையும், முந்தைய நபிமார்களையும் கண்டு பேசிவிட்டு மண்ணகம் திரும்பினார். நபிகள் நாயகத்தின் இத்தகைய விண்ணேற்ற அனுபவங்களை விவரிப்பதே மிஃராஜ் ஆகும்.

மிம்பர்: (மின்பர்) மிம்பர்’ எனும் அரபிச் சொல்லுக்கு உயரமான இடம்’ என்பது பொருளாகும். ஜும்ஆவின் போது கதீப் ஏறி நின்று குத்பா ஒதும் மேடையே மிம்பர் ஆகும். இது மிஹ்ரா புக்கு அடுத்து அமைந்திருக்கும்.

தொடக்கத்தில் மதீனாவின் மஸ்ஜி துந் நபவியில் பெருமானார் குத் பாப் பேருரை ஆற்றினார். அப்போது அவர் ஈச்சங்கட்டை ஒன்றில் ஏறிநின்று சொற்பொழிவாற்றுவது வழக்கம்.

கைபர் போரின்போது அவருக்கு நஞ்சூட்டப்பட்டதனால், உடல் தளர்வு ஏற்பட்டது. அதனால் அவரால் நீண்ட நேரம் நிற்க இயலாத நிலை. அப்போது அவர் தோழர் தமீம் தாரி என்பவர் மரத்தால் சிறு மேடை செய்து அதில் வசதியாக உட்கார்ந்து குத்பா ஒது மாறு வேண்டினார். அதற்கிணங்க ஈச்சங்கட்டையை அகற்றி, அவ்விடத் தில் போடப்பட்ட மரமேடை குத்யா ஒதப் பயன்படுத்தப்பட்டது. இம்மர மேடையில் இரண்டு படிகள் இருந்தன.

அவருக்குப்பின் வந்த அபூபக்ர் (ரலி) கலிஃபாவானவுடன், இரண்டாவது படி யில் அமர்ந்து குத்பா உரை நிகழ்த்தி னார். உமர் (ரலி) கலீஃபாப் பதவி ஏற்ற பின் முதல்படியில் அமர்ந்து குத்பா ஒதி னார். அவருக்கும் பின்வந்த உதுமான் (ரலி) பெருமானார் (ஸல்) அமர்ந்த மேடையிலே அமரலானார். இதை யாரும் ஏற்காததால் எதிர்ப்பு ஏற்பட்