பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 3 $

இத் தீய போக்கிலிருந்து மக்களை மீட்க வழிதேடினார். தியான முறை தம் உள்ளொளியைப் பெருக்க முனைந்தார். இதற்காக மக்கா நகருக்கு அருகில் உள்ள ஹிரா குகையில் தனிமைத் தவம் இருந்தார். அங்கு இறைவனைக் குறித்தும், படைப்பின் அற்புதங் களைக் குறித்தும் ஆழ்ந்த சிந்தனையி லும் தியானத்திலும் ஈடுபடலானார். இதற்காகப் பல நாட்கள் பசித்திருந் தார். தனித்திருந்தார். மனத்தை அடக்கி அறிவு வழி சிந்திக்க மோனத் தவமிருந்தார். இவ்வாறு நாட்கள் வாரங்களாகவும் மாதங்களாகவும்

கள் மூலம்

நாட்கணக்கில்

ஆண்டுகளாவும் உருண்டோடின.

கி.பி. 609 ரமலான் மாதம் அவரின் நாற்பதாம் வயதில் ஒரு நாள் இரவு ஹிரா குகையில் தியானத்தில் இருந்த முஹம்மது ஒதுவீராக’ எனும் குரல் கேட்டுத் திடுக்கிட்டார். அவர் முன் காட்சியளித்த ஓர் உருவம் நான்தான் ஜிப்ரயீல்' என்று கூறியது. இறைவனு டைய செய்திகளையும், அவனுடைய வேத மனித இனத்திற்கு அறிவிப்பதற்காக நீர் இறைவனால் நியமிக்கப்பட்டிருக்கிறீர் என்பதை உமக்குத் தெரிவிப்பதன் பொருட்டு இறைவனால் அனுப்பப் பட்ட வானவர் நான்' என்று அவ்வுரு வம் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டது. அத்துடன் முஹம்மது இறைவனின் நபியாக, தூதராக நிய மிக்கப்பட்டுள்ளதையும் அ றி வி த் து, அவரை ஒதப் பணித்தது.

வெளிப்பாடுகளையும்

நான் ஒதுபவன் அல்லனே (எனக்கு ஒதத் தெரியாதே!) எனக் கூறினார். இதைக் கேட்ட வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அண்ணலாரை இறுகத் தழுவினார். பின் ஒதுக' என்றார். அப்போதும் பெருமானார் ஒதவில்லை.

முஹம்மது (ஸல்)

மொத்தம் மும்முறை ஜிப்ரீல் (அலை) தழுவிய பின்னர் பெ ரு மா னார் வாயைத் திறந்து ஒதத் தொடங்கி னார். இக்ரஉ' இறைமறை வசனங்கள் ஐந்து பெருமா னார் வாய்மூலம் முதன் முதலாக வெளிப்பட்டன.

எனத் தொடங்கும்

இந்த அற்புத நிகழ்ச்சியைத் துணை

வியார் கதிஜாவிடம் கூறினார். பெரு மானார் முஹம்மது கூறிய அனைத்தை யும் அம்மையார் நம்பினார். பெரு மானாரை இறைதூதராக ஏற்றுக் கொண்டார். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே முஹம்மது அவனு டைய திருத்துாதர் என்பதில் முழு நம்பிக்கை வைத்து இஸ்லாமிய மார்க் கத்தில் தன்னை முதன்மையாளராக இணைத்துக் கொண்டார். பின்னர், அபூபக்ர் ஸித்திக், வீரர் அலி முதலா இஸ்லாத்தில் ந ம் பி க் ைக கொண்டு இணைந்தனர்.

னோர்

இன்றைய உலக மக்களில் நான்கில் ஒருவர் வீதம் நம்பிக்கை வைத்துள்ள இஸ்லாம் மார்க்கம் இவ்வாறுதான் வளர்ந்தது.

மக்காவாசிகள் பல தெய்வ உருவ வழிப்பாட்டில் மூழ்கிக் கிடந்தனர். 'உருவமற்ற, இணை-துணை இல்லாத அல்லாஹ் ஒருவனே இறைவன்' என்று பெருமானார் கூறுவதை ஏற்க மறுத்த னர். தீய வழிகளில் ஒழுக்கக் கேடர் களாக வாழ்ந்த மக்கா வாசிகளில் சிலர் பெருமானார் கூறும் நன்னெறிகளைக் கேட்டு குண்டனர்.

நல்லவர்க சிலர் நபிகள் நாயகம் (ஸல்) போதித்த இஸ்லாமிய நெறியில் நம்பிக்கை கொண்டு முஸ்லிம்களாகி, நல்வழி நடந்தனர். இதைக் கண்டு குறைஷிகள் கோபமும் கொதிப்பும் கொண்டனர். மிரட்டி அடக்கி ஒடுக்க