பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 38

திரும்பினார். ஒப்பந்தப்படி குறைஷி கள் நடக்கவில்லை.

பெருந்தொகையினரான முஸ்லிம் களுடன் பெருமானார் ஹஜ் பயணம் மேற்கொண்டார். மக்காவுக்கு அருகில் உள்ள குன்றின்மேல் தங்கினர். இரவில் நீண்ட வரிசையாக அடுப்பு முட்டினர். மிகப்பெரும் பரப்பில் அடுப்பெரிவதால் மாபெரும் படையுடன் அண்ணலார் வந்து தங்கியிருப்பதாகக் குறைஷிகள் கருதினர். இனி எக்காரணம் கொண் டும் முஸ்லிம்களை வெல்ல முடியாது என்று கருதினர். பெருமானாரிடம் சரணடைவது என முடிவு செய்தனர். பின் தங்கள் ஆயுதங்களை ஒப்ப டைத்து குறைஷியர் தம் தோல்வியை ஒப்புக்கொண்டனர்,

இவ்வாறு போர் ஏதும் இன்றி, மாநபி மக்கா நகரைக் கைப்பற்றி வெற்றி பெற்றார். எதிரிகளில் பலரும் இஸ்லாத்தில் நம்பிக்கை கொண்டு இணைந்தனர்.

இதனால் பெருமானாரின் பெருமை யும் புகழும் திசை எங்கும் பரவின.

இஸ்லாமிய மார்க்கத்தின் நன்னெறி களை அறிந்துணர்ந்த பிற பகுதி மக்கள் முஸ்லிம்களாயினர். இதனால்

அரேபியாவெங்கும் அடுத்துள்ள நாடு களிலும் இஸ்லாம் வலுவாக வளர்ந்து உலகப் பெரும் மார்க்கமாக நிலை பெற்றது.

தம் இறுதி இறைத்துாதை முழுமைப் படுத்திய நபிகள் நாயகம் (ஸல்) இறை வாக்குப்படி வாழ்ந்துகாட்டிய மனிதப் புனிதர் ஆவார்.

உலகுக்கோர் அழகிய முன்மாதிரி யாக வாழ்ந்து காட்டிய அண்ணலார் தம் அறுபத்து மூன்றாம் வயதில் மதி னாவில் காலமானார்கள். பெருமா

முஹம்மது அலி, மெளலானா

னார் மதீனாப் பள்ளியிலேயே நல்லடக்

கம் செய்யப்பட்டார்.

முஹம்மது அலி, மெளலானா விடு தலைப் போராட்ட கால முஸ்லிம் தலைவர்களில் மிக மெளலானா முஹம்மது அலி அவர்கள். உத்திரப்பிரதேசத்தில் உள்ள ராம்பூர் சமஸ்தானத்தில் 1878ஆம் ஆண்டில் பிறந்தார். சிறுவராக இருக்கும்போதே தம் தந்தையை இழந்து, தாயார் ஆபிதா பானுவால் வளர்க்கப்பட்டார். அக்காலப் போக்குக்கு மாறாக இவரது அன்னை இவரை ஆங்கிலக் கல்வி கற்க வைத்தார். பள்ளிக் கல்வியை முடித்த இவர் அலிகர் பல்கலைக்கழகத்தில் தம் படிப்பைத் தொடர்ந்தார். இவரது ஆங்கில அறிவு ஆங்கிலப் பேராசிரியர் களையே திகைக்க வைத்தது. மேற் படிப்புக்காக லண்டன் சென்று பி.ஏ. ஹானர்ஸ் ப டி ப் பி ல் தேறினார். ஆனால் அடுத்து எழுதிய ஐ.சி. எஸ் தேர்வில் தோல்வியடைந்தார்.

முக்கியமானவர்

இந்தியா திரும்பிய பின்னர் ராம்பூர் சமஸ்தானத்திலும் பரோடா சமஸ் தானத்திலும் கல்வி அதிகாரியாகச் சிலகாலம் பணிபுரிந்தார். பின்னர் ஆங்கிலத்திலும், உருதுவிலும் இரு இதழ்களை நடத்தினார். அவற்றில் அரசின் போக்கையும், அரசியல் நட வடிக்கைகளையும் விமர்சனம் செய்து வந்தார். இதனால் கசப்படைந்த ஆங்கில அரசு அவற்றின்மீது பல தடவை நடவடிக்கை எடுத்தது.

இந்திய முஸ்லிம்களிடையே ஒருமை உணர்வைத் தோற்றுவிக்க தீவிரமாக முயன்றார். அவர்களின் சக்தியையும், சிந்தனையையும் ஒருமுகப்படுத்த விழைந்தார். அதன் விளைவாக 1906ஆம் ஆண்டு டாக்காவில் முஸ்லிம்களின் மாநாடு ஒன்றை நடத்தினார். அதில் மற்றவர்களோடு இணைந்து முஸ்லிம்