பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

டது. யூனாணி முறை மட்டுமே வள மடைந்தது.

ஆங்கிலேயர் ஆட்சி பீடமேறிய பின் னர் தங்கள் மருத்துவமுறையான அலோபதிக்கு முக்கியத்துவமளித்தனர். இதனால் இந்திய வைத்திய முறை களான ஆயுர்வேத, பூனானி, சித்த மருத்துவ முறைகள் நாளடைவில் தசிய லாயின.

நாடு விடுதலை பெற்றபின் இந்திய மருத்துவ வகைகளான யூனானி, ஆயுர் வேதம்,சித்த மருத்துவ முறைகள் மீண் டும் வளரத்தொடங்கின. இவற்றின் வளர்ச்சிக்கு அரசு எல்லாவித உதவி களையும் ஒத்துழைப்புகளையும் நல்கி வருகிறது. இவற்றிற்கான ஆராய்ச்சிக் கூடங்கள் நாட்டின் பல பகுதிகளில் அரசின் அரவணைப்போடு இயங்கி வரு கின்றன. இந்திய மருத்துவ முறைகள் உ ள் நா ட் டி லும் வெளிநாட்டிலும் நாளுக்கு நாள் புகழ்பெற்று வருகின் றன.

ரஸ்இல்: இச்சொல்லுக்கு இறை தூதர்' என்பது பொருளாகும். மக்க ளுக்கு இறைவழி காட்டுவதற்கென அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறை து தர்கள் நபிமார்கள் என அழைக்கப் படுவர். இவர்களின் தொகை ஆதம் (அலை) தொடங்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஈராக ஒரு இலட்சத்து இருபத்தி நான்காயிரமாகும்.

இந்நபிமார்களுள்ளும் மேம்பட்டவர் களாகக் கருதப்படுபவர்கள் ரஸ் இல் மார்கள். இவர்களின் தொகை 31.3 ஆகும். இவர்களே இறைவேதங்களைப் பெற்று மக்களுக்கு அளிக்கும் பேறு பெற்றவர்கள். வானவர்களையும் ரஸ் அல்கள் என்று சில இடங்களில் திருக்குர்ஆன் கூறுகிறது. ஆனால், நபி மார்கள் மனிதர்களாக மட்டுமே அமைவர்.

ரமலான்

ரமலான்: இஸ்லாமிய மாதங்களில் ஒன்பதாவதான இது மிக முக்கிய மாத இஸ்லாத்தின் ஐம்பெரும்

மாகும்.

கடமைகளில் ஒன்றான நோன்பு' இம்மாதத்தில் முழுமையாக நிறை வேற்றப்படுகிறது. ரமலான்' என்ற

சொல்லுக்குச் சுட்டெரித்தல்' என்பது பொருளாகும். இம்மாதம் முழுவதும் நோன்பு நோற்று தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகைகளை நிறைவேற்று வதன் மூலம் தங்கள் பாவங்களைச் சுட் டெரிப்பதால் இப்பெயர் பெற்றது. திருக்குர்ஆனில் ரமலான் மாதம் மட் டுமே இறைவனால் குறிப்பிடப்பட்டுள் ள்து.

இம்மாதத்தின் மற்றொரு சிறப்பம் சம் இது வேதங்களின் மாதமாகவும் அமைந்துள்ளதாகும். இம்மாத முதல் நாளன்று இப்ராஹீம் (அலை) அவர் கட்கு ஸாஹ்பு (வேதம்) இறைவனால் அருளப்பட்டது. இம்மாதம் ஆறாம் நாள் மூஸா (அலை) அவர்களுக்கு இறைவனால் தெளராத் வேதம் தந் தருளப்பட்டது. இம்மாதத்தின் பன்னி ரண்டாம் நாளன்று தாவூது (அலை) அவர்கட்கு ஜபூர் வேதம் இறக்கியருளப் பட்டது. ரமலான் மாதம் பதினெட் டாம் நாளன்று ஈஸ்ா (அலை) அவர் கட்கு இன்ஜில் வேதம் வழங்கப்பட்டது. ரமலான் இருபத்தியேழாம் நாளான லைலதுல் கத்ர் இரவன்று முஹம்மது (ஸல்) அவர்கட்கு புர்கான் எனும் திருக்குர்ஆன் அருள்வது துவங்கப்பட் -து.

இஸ்லாம் விதித்த ஐம்பெரும் கடமை களில் ஹஜ் தவிர்த்து ஏனைய நான்கு கடமைகளும் இம்மாதத்தில்தான் ஒரு சேர நி ைற .ே வ ற் ற ப் படுகின்றன. எனவே, ரமலான் மாதம் அனைத்து மாதங்களிலும் சிறப்புடைய மாத மாகப் போற்றப்படுகிறது.