பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

அப்துல் மஜீதுப் புலவர் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பணி யாற்றியவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் அப்துல் மஜீதுப் புலவர்.

வள்ளல் சீதக்காதி வழிவந்த இவர் கீழக்கரையில் பிறந்தார். இளம் வயதில் அரபி, தமிழ்மொழிகளில் புலமை பெற்றார். மார்க்க ஞானத் தோடு தமிழ் இலக்கிய அறிவும் நிரம் பப் பெற்றவராகத் திகழ்ந்தார். இள மையிலேயே தமிழில் கவிதை இயற் றும் ஆற்றல் பெற்றார்.

தொழில் நிமித்தம் இலங்கை சென் றார். அங்கு தொழில் தொடர்பான பணிகளுக்கிடையே இப்ராஹீம் நெய் னார்ப் புலவர் என்பவரிடம் இலக் கணம் கற்றார். இவ்வாறு இலக்கிய, இலக்கண அறிவு நிரம்பப் பெற்ற இவர், அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது கீர்த்தனைகள் பலவற் றைப் பாடினார். ஐம்பது கீர்த்தனை களைக் கொண்ட அந்நூலுக்கு சங் கீர்த்தந மஞ்சரி' என்று பெயரிட்டார். இலங்கை வள்ளல் முஹம்மது தம்பி

மரைக்காயரின் விருப்பத்திற்கேற்ப ஆசாரக்கோவை' என்ற நூலையும் இயற்றினார். இந்நூல் நூறு கட்ட

ளைப் பாக்களால் ஆனது. அப்பாடல் களின் ஒவ்வொரு ஈற்றடியிலும் நன்றி யுணர்வோடு கொடை வள்ளலின் பெயரை முஹம்மதுத் தம்பி மரைக் காய சகாயனே எனக் குறிப்பிட்டுள் ளார். இந்நூல் 1902ஆம் ஆண்டில் வெளிவந்தது.

இவர் தமது 84ஆம் வயதில் இலங் கையில் உள்ள தேனி எனுமிடத்தில்

காலமானார்.

எளிமையும் இனிமையும் பாடல்களின் தனிச்சிறப்பாகும்.

இவர்

அப்துல் முத்தலிப்

அப்துல் முத்தலிப் இவர் அண்ணல் நபிகள் நாயகத்தின் பாட்டனார் ஆவார். குறைஷிகளின் தலைவராக

விளங்கிய ஹாஷிம் என்பாரின் மகன். இவரின் தாயாரின் பெயர் ஸ்லமா என்பதாகும். இவர்களின் திருமகனாக கி.பி. 497 ஆம் ஆண்டில் மக்காவில் பிறந்தார்.

மக்கா மாநகருக்கு வரும் பயணி களுக்குத் தண்ணீர் தந்துதவும் பணி யைச் செய்து வந்தார். ஒரு சமயம் மக்காவில் கடுமையான தண்ணிர்ப் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது கஃபா வரும் பயணிகட்குத் தண்ணிர் தந்து உதவ இயலவில்லையே என்று வருந்தி னார், ஒரு நாள் அவர் தம் கனவில் ஜம்ஜம் கிணறு தூர்ந்துபோய்க் கிடக் கும் இடத்தைக் கண்டார். அக்கனவில் அதைத் தோண்டிப் பயன்படுத்துமாறு ஏவப்பட்டார்.

கனவில் கண்ட அடையாளப்படியே ஜம்ஜம் கிணறு மூடிக்கிடக்கும் இடத் தைக் கண்டுபிடித்தார். தம் ஒரே மகன் ஹாரிதுடன் அங்கு தோண்டினார். ஜம்ஜம் கிணற்றுத் தண்ணீர் மக்களின் தாகத்தைப் போக்கியது.

இவருக்குப் பத்தாம் மகனாகப் பிறந் தவர் அப்துல்லாஹ். இவரே பெருமா னாரின் தந்தை ஆவார். பெருமானார் ஆமீனாத் தாயாரின் கருவில் இருக்கும் போதே, தந்தை அப்துல்லாஹ் வணி கம் செய்யச் சென்ற இடத்தில் நோய் வாய்ப்பட்டுக் காலமானார். பெரு மானாருக்கு ஆறு வயதாகும் முன்பே ஆமீனாத் தாயாரும் காலமானார். அதன்பின் பாட்டனார் முத்தலிபின் பொறுப்பில் பெருமானார் வளரலா னார்.