பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 50

பிரச்சாரப் பணியில் ஈடுபட்டனர். இங்குள்ள பலர் மார்க்கத்தில் இணைந் ததோடு, மார்க்க அறிவுபெற அவர் இவர் களும் மார்க்கப் பிரச்சாரத்தில் அரபி

  • ० r- ് ു~് " ..~ களுடன் பணியாற்றலாயினர். அப் போது அவர்கள் அரபிகள் கூறிய பணி களைச் செய்ய இதோ செவிமடுத்

g

களின் சீடர்களாகவும் ஆயினர்.

தேன்', 'இதோ ஆஜராகிவிட்டேன்

எனும் பொருளில் லெப்பைக் எனக் கூறு வ து வழக்கமாயிற்று. நாள டைவில் இச்சொல் நிலைபெற,

சீடர்கள் இ ச் .ெ ச ல் லா லே யே அழைக்கப்படலாயினர். காலப்போக் கில் அரபிகள் ஆற்றிவந்த இஸ்லாமியப் பிரச்சாரப் பணிகளை இச்சீடர்களும் அவர் வழி வந்தோரும் தொடர்ந்து ஆற்றலாயினர். இவர் தம் வழித் தோன்றல்கள் இன்றும் லெப்பை என்ற பெயராலேயே அழைக்கப்படுகின்றனர். தமிழ்க முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் இப்பெயருக்குரியவர்களாக உள்ளனர். திருச்சிராப்பள்ளி மாவட்டம் பெரம் பலூர் வட்டத்தில் லெப்பைக் குடிக் காடு' என்ற பெயரில் ஒரு ஊர் அமைத் துள்ளது. இது முஸ்லிம்கள் பெரும் பான்மையாக வாழும் ஊராகும்.

லைலதுல் கத்ர்: இச்சொல்லுக்குக் 'கண்ணிய மிகுந்த இரவு' என்பது பொருளாகும். நெருக்கமான இரவு' என்ற பொருளும் இதற்குக் கூறப்படு கிறது.

இஸ்லாமியத் திருமறையான திருக்

குர்ஆன் இந்த இரவில்தான் மனித குலத்துக்காக இறைவனால் இறக்கி

துவங்கப்பட்டது. இதனால் இந்த இரவு மிகவும் கண்ணியம் வாய்ந்த இரவாகக் கருதிப் போற்றப் படுகிறது. அன்றைய இரவில் வானவர் கள் இறையருளை மக்கட்கு வாரி வழங்க பூமிக்கு வருகிறார்கள். இத னால் பூமியில் மிகுந்த நெருக்கடி ஏற் படுகிறது. இதனால் இந்த இரவு

யருளத

வக்ஃபு

நெருக்கமான இரவு' என்ற பெயரா லும் குறிக்கப்படலாயிற்று. இவ்விரவில் செய்யப்படும் இறைவணக்கம், ஆயிரம் மாத வணக்கப் பலனைவிட அதிகம் என இறைமறை கூறுகிறது.

லைலதுல் கத்ர் இரவு ரமலான் மாதம் 27ஆம் நாள் இரவாக அமைந் துள்ளது. எனினும் லைலதுல் கத்ர்" இரவை வழிபாடுகளுக்காக ரமலான் பிறை 20-க்குப் பின்னுள்ள ஒற்றைப் படை இரவுகளில் தேடிக் கொள்ளுங் கள் எனப்பெருமானார்கூறியுள்ளார்கள்

ஒன்பது எழுத்துகளால் ஆனது. இது மூன்று முறை திருக்குர்ஆனில் வருவதால் (3-9-27) 27ஆம் நாள் இரவே லைல துல் கத்ர் இரவு எனக் கருதப்படுகிறது. இந்த இரவில் சிறப்புத் தொழுகைகள் இந்த இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறப்புடை யது என அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்.

லைலதுல் கத்ர் என்பது

தொழப்படுகின்றன.

வக்ஃபு: இறைவனின் பெயரால் மக்க ளின் பொது நன்மைக்கென நிலையான சொத்தைத் தானமாக வழங்குவது வக்ஃபு' எனப்படும். இச்சொல்லுக்கு 'நிலைநிறுத்துதல் என்பது பொருளா கும். இறைவன் பெயரில் குறிப்பிட்ட பொது நன்மையை நோக்கமாகக் கொண்டு நிலைநிறுத்தப்படும் சொத்து வக்ஃபுச் சொத்தாகும். இவ்வாறு அளிக் கப்படும் சொத்து இறைவன் உடைமை யாகிவிடுகிறது. இதன்பிறகு வக்ஃபுச் சொத்தின் மீது அதனை வழங்கியவருக் கோ அவரின் வாரிசுதாரர்களுக்கோ எவ்வித உரிமையும் இல்லாது போய் விடுகிறது.

வக்ஃபு செய்யப்படும் பொருள் எளி தில் அழியக்கூடியதாக இருக்கக் கூடாது அழியாநிலையில் வருவாய் தரக்கூடிய தாக இருத்தல் வேண்டும்.