பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாணியம்பாடி

யொன்றைப் பரிசு அளித்திருந்தார். இவர் தமது 81ஆம் வயதில் இராஜ சிங்கமங்கலத்திற்கருகில் தும்படைக் காக் கோட்டையில் காலமானார்.

வஹீ: அல்லாஹ் தன் தூதர்களுக்கு அறிவிக்கும் இறைமறைச் செய்திகளே வஹீ என அழைக்கப்படுகிறது. வஹீ' எனும் அரபுச் சொல்லுக்கு இறைச்

செய்தி வெளிப்படுத்தல்' என்பது பொருளாகும்.

இறைத் தூதர்களாகிய ந பி மார்

களுக்கு மட்டுமே வஹீ எனும் இறைச் செய்தி இறைவனால் நேரடியாகவும், வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலமும் அளிக்கப்படுகிறது. இந்த இறைச் செய்திகளே பின்னர்

இறைமறையாகவும் அமைகிறது.

நபிமார்களுக்கு வழங்கும் இறைச் செய்தி போன்றே வலிமார்களுக்கு மன உதிப்பாகச் செய்தி அருளப்படுவதும் உண்டு. இதை அரபி மொழியில் இல் ஹாம் என்று அழைப்பார்கள். ஷைத் தான் சில சமயங்களில் தவறான வழி யில் செலுத்த சில உணர்வுகளை மனித னுக்கு ஊட்டித் துாண்டுவான். இத்த கைய தீய உணர்வுகள் வஸ்வாஸ்’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

இறைத்து தர்களிலேயே மிக அதிக அளவில் இறைச் செய்திகளை வஹீயா கப் பெற்றவர் பெருமானார் (ஸல்) அவர்களே ஆவார். அவருக்கு சுமார் இருபத்தி நான்காயிரத்திலிருந்து இரு பத்தியேழாயிரம் தடவைகளுக்குமேல் வஹீயாக இறைச் செய்தி வழங்கப்பட் டிருப்பதாக மார்க்க அறிஞர்கள் கணக் கிட்டுள்ளனர். இதுவே இஸ்லாமியத் தி ரு ம ைற ய | ன 'திருக்குர்ஆன் தொகுப்பாகும். மற்ற நபிமார்களுக்கு மூவாயிரம் தடவைகள் வரை வஹீயாக

இறைச்செய்தி இறங்கியது.

153

இறைவனிடமிருந்து இறைச்செய்தி யை வஹீயாகப் பெருமானார் பெற, அவரது உள்ளத்தைப் பலப்படுத்தும் வகையில் பல நிகழ்வுகள் அவருக்கு அமைந்தன.

பெருமானார் முன் சில சமயம் விண் னில் ஒளித்திறள்கள் ஒருங்கு திரண்டு தோன்றும். அவற்றை அவர் வியப் போடு உற்று நோ க் கு ம் .ே பா து மறைந்துபோகும். சில சமயம் மெல் லிய குரலில் யாரோ பேசுவதுபோல் தெளிவில்லாமல் இருக்கும். செவி மடுத்து உற்றுக்கேட்கும்போது அவ் வொலி நின்று போகும். இவ்வாறு பல நாட்கள் நடந்து பெருமானார் மன உரம் பெற்ற நிலையில் ஹிரா குகையில் லைலதுல் கத்ர் இரவில் ஜிப்ரீல் (அலை) நேரில் தோன்றினார். பெரு மானாரைக் கட்டியனைத்து இறைச் செய்தியை ஒதச்செய்தார். பெருமா னாரும் ஓதத்தொடங்கவே அச்செய்தி உள்ளத்தில் புகுந்து நிலைத்தது.

சில சமயங்களில் ஒலிவடிவில் இறைச் செய்தி வஹீயாய் இறக்கப்பட்டது. வேறுசில சமயங்களில் ஒளி வடிவிலும், உருவ வடிவிலும் ஜிப்ரீல் (அலை) அவர் களால் இறைச்செய்தி வஹீயாக அறிவிக்கப்பட்டது.

வாணியம்பாடி வடார்க்காடு அம் பேத்கார் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறு நகரமாகும். இங்கு வாழும் மக்க ளில் பெரும்பாலோர் முஸ்லிம்களாவர். மைசூரை ஆண்ட ஹைதர் அலி ஆங்கி .ே ல ய ர் க ைள இங்கு எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றதாக வர லாறு கூறுகிறது.

இந்திய விடுதலைப் போராட்டத் தின் போதும், கிலாஃபத் இயக்கத்தின் போதும் இவ்வூர் அவற்றில் பெரும் பங்கு கொண்டு பணியாற்றியுள்ளது.