பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

கும். தனது சொத்து வருமானத்தில் நாற்பதில் ஒரு பங்கை தானம் செய்யப் பணிப்பது ஜகாத். இதன் மூலம் தானம் செய்தது போக எஞ்சியுள்ள சொத்து தூய்மை பெறுவதால் இப் பெயர் பெற்றது எனலாம். இறைவன் தன் திருமறையில்'(நபியே)அவர்களின் பொருட்களிலிருந்து ஜகாத்தை எடுத் துக் கொண்டு அவர்களைத் தூய்மைப் படுத்தி ஆசீர்வதிப்பீராக! (9:103) எனக் கூறுகிறான். இதிலிருந்து நம் சொத்தையும், மனத்தையும் தூய்மை யாக்கும் ஆற்றல் ஜகாத்துக்கு உண்டு என்பது புலனாகிறது. திருக்குர்ஆனில் பல இடங்களில் தொழுகையையும், ஜகாத்தையும் இணைத்தே இறைவன் கூறியுள்ளான்.

பைத்தியத் தன்மை இல்லாதவராக, வயதுவந்தவராக, சுதந்திரமான ஒவ் வொரு முஸ்லிமுக்கும் ஜகாத் கடமை யாகும். ஜகாத் கொடுப்பவர் கட னாளியாக இல்லாமல் இருக்க வேண் டும். தம் செலவுகளெல்லாம் போக மீதமுள்ள வருமானத் தொகையில் நாற்பதில் ஒரு பங்கை ஜகாத்தாக வழங்கிவிட வேண்டும்.

ஜகாத்தை யார் யார் பெற உரிமை யுள்ளவர்கள் என்பதைத் திருமறை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. ஜகாத் எனும் தானங்களெல்லாம், தரித்திரர் களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூலிப்பவர்களுக்கும், புதிதாக இஸ் லாத்தைத் தழுவியோர்க்கும், அடிமை களை விடுதலை .ெ ச ய் வ த ற் கு ம், கடனில் சிக்கியவர்களுக்கும், அல்லாஹ் வுடைய பாதையில் போர் புரிவதற் கும், வழிப்போக்கர்களுக்கும் (உரித் தானதாக) அல்லாஹ் ஏற்படுத்திய கடமையாகும். (9: 60) என்பது திருக் குர்ஆன். -

ஜம்ஜம்

ஜகாத் கொடுப்பவர் தமக்குரிய ஜகாத் கடமையை நிறைவேற்றுவதாக நிய்யத்துச் செய்துகொள்ள வேண்டும்.

ஜம்ஜம், கஃபத்துல்லாவின் அருகில் அமைந்துள்ள குடிநீர்க் கிணற்றின் பெயர் ஜம்ஜம் என்பதாகும். இதற்கு 'நில்நில்' என்பது பொருள்.

இறை ஆணைப்படி இப்ராஹீம் (அலை), தம் மனைவி ஹாஜராவையும், குழந்தை இஸ்மாயிலையும் கஃபா அருகில் விட்டுவிட்டுச் சென்று விட் டார். குழந்தை தாகத்தால் துடித்தது. தாய் ஹாஜரா நீர்தேடி ஸ்ஃபா, மர்வா எனும் இரு குன்றுகளுக்கிடையே ஏழு முறை ஒடி நீர் தேடினார். எங்கும் நீரில்லாதது கண்டு கலங்கினார். அப் போது தாக வேட்கை மிகுதியால் துடித்த குழந்தை இஸ்மாயீல், தன் கால்களால் தரையில் ஓங்கி அடித்தது. அடித்த இடத்திலிருந்து தண்ணீர் பொங்கி ஓசையுடன் வெளிப்பட்டது. இவ்வோசை கேட்டு ஓடிவந்த அன்னை ஹாஜரா நீர் பொங்கி வெளிப்பட்டு ஒடுவதைக் கண்டு ஜம்ஜம் (நில்நில்) எனக் கூவியபடி மண்ணால் அனை கட்டி நீரைத் தேக்கலானார். அன்று முதல் இந்நீருற்று ஜம்ஜம்' எனும் பெயரைப் பெறலாயிற்று.

இந் நீர் நிலை பல்வேறு காலகட்டங் களில் தூர்ந்து போய் மீண்டும் மீண்டும் தூர் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அண்ணலாரின் சிறு பிரா யத்தில் இக்கிணறு மீண்டும் செப்பம் செய்யப்பட்டது. இன்று ஜம்ஜம் கிணறு கஃபத்துல்லாவுக்கு அருகில் தரை மட்டத்திற்குக் கீழாக அமைந்துள்ளது. குழாய் மூலம் நீரேற்றிக் குடிக்க வழங் கப்படுகிறது.

ஜம்ஜம் கிணற்று நீரில் உலோகச் சத்துக்கள் பலவும் இருப்பதாகக் கண்