பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

களோடு ஜும்ஆ தொழுதார். அது

முதல் ஜும்ஆ தொழுகை நடை முறைக்கு வந்தது என்பர். அங்குள்ள

மஸ்ஜிதுல் ஜும்ஆ'

பள்ளி இன்றும் என்றே அழைக்கப்படுகிறது.

ஸ்ஃபா, மர்வா. கஃபத்துல்லாவுக்கு அருகில் அமைந்துள்ள இரு சிறு குன்று களின் பெயர் ஸ்ஃபா, மர்வா என அழைக்கப்படுகிறது. ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களும் ஹவ்வாத் தாயா ரும் எதிர் எதிராக இக்குன்றுகளின் மேல் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தக் குன்றுகளுக்கு அருகேதான் இப்ராஹீம் (அலை), தம் துணைவியார் ஹாஜராவையும், அன்புக் குழந்தை இஸ்மாயிலையும் தனியே விட்டுச் சென் றார். குழந்தை இஸ்மாயீல் தாக வேட் கையால் அழுதபோது அ ன் ைன ஹாஜரா நீர் தேடி இந்த இரு குன்று களிடையே ஏழுமுறை ஒடித் துடித்தார். குழந்தை இஸ்மாயீல் துடித்து அழுத போது தன் காலைத் தரையில் அடிக்க நீர் பொங்கியது. அதுவே ஜம்ஜம் நீர் நிலை. அதுவும் ஸ்ஃபா-மர்வாக் குன்று களுக்கு அருகேதான் அமைந்துள்ளது. இன்றும் உம்ரா செய்வோராக இருந் தாலும், ஹஜ் கடமையை நிறைவேற்று வோராக இருந்தாலும் இக்குன்றுகளுக் கிடையே ஏழுமுறை தொங்கோட்டம் ஒடுவது வழக்கமாக உள்ளது. இச் .ெ ச ய லு ம் வணக்கத்தின்பாற்பட்ட செயலாகவே கருதப்படுகிறது. இங் கேட்கும் துஆக்கள் இறை வனால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

கிருந்து

இவ்விரு குன்றுகளும் சொர்க்கத்தின் இரு வாசல்களாகும் எனக் கூறப்படு கிறது.

நபிமார்களில் ஒருவரான

அவர்கட்கு இறை ஸ்பூர்

ഞു്: தாவூது (அலை) வனால் அருளப்பட்ட வேதம்

ஸ்லாத்

வேதமாகும். இறைவனைப் புகழும் 150 புகழ்ப் பாக்களைக் கொண்டதே ஸ்பூர் வேதம். இதனை எழுபது வகை யான இராகங்களில் இனிய குரலில் தாவூது(அலை) அவர்கள் பாடுவாராம். இவ்வேதம் யூனான் மொழியில் அருளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஸலவாத் புகழ்தல் எனும் பொருளில் ஸலவாத் எனும் அரபிச் சொல் அமைந் துள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர் களைப் புகழ்தலே ஸலவாத் ஆகும். "நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கிறார்கள் (ஆகவே) நம்பிக்கை யாளர்களே! நீங்களும் அவர் மீது ஸ்ல வாத்துச் சொல்லி ஸ்லாமும் கூறிக் கொண்டிருங்கள்' (33:56) என்பது திருக்குர்ஆன் வாக்கமுதாகும். இதில் அவர் என இறைவன் மதிப்போடு குறிப்பிடுவது அண்ணல் நபிகள் நாய கம் (ஸல்) அவர்களையே யாகும். ஸலவாத்துடன் ஸ்லாமும் கூறுபவர்கள் இறைவனிடமிருந்து மிகுந்த நன்மை யைப் பெறுவர் என்பது ஆன்றோர் வாக்கு. இருபத்தைந்து வகை ஸலவாத் துக்களும் பதினைந்து வகை ஸலாமும்

இருப்பதாகக் கூறுவர்.

ஸ்லாத் தொழுகையைக் குறிக்கும் சொல்லாக ஸ்லாத்' எனும் சொல்

அமைந்துள்ளது. ஐம்பெரும் இஸ்லா மியக் கடமைகளில் இரண்டாவதாக அமைந்திருப்பது தொழுகையாகும். ஒவ்வொரு முஸ்லிமும் ஐவேளைத் தொழுகையைக் கட்டாயம் கடைப் பிடித்தொழுக வேண்டும் என்பது

இறைக் கட்டளையாகும். தொழுகை யைப் புறக்கணிப்பது இஸ்லாத்தையே புறக்கணிப்பதாகும். ம னி த ைன ப் பாவங்களிலிருந்து மீட்பது தொழு கையே யாகும்.