பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 64

களையும் ஆதரித்தார். அடிக்கடி பரி சில்கள் வழங்கி ஊக்குவித்தார். இதில் அவர் முஸ்லிம்-முஸ்லிமல்லாதவர் என்ற பாகுபாடு காட்டியதே இல்லை. ஒவ்வோர் இரவும், துங்கச் செல்லும் போது நல்ல இலக்கியப் பகுதிகளையும் ஞான நூல்களையும் படிக்கச் செய்து அவற்றைக் கேட்டபடியே உறங்குவது இவரது வழக்கமாகும். இவர் முத்த மகன் தாரா மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தார். அவரையே தமக்குப் பின் அரசராக்கவும் எண்ணியிருந்தார். இதை அறவே விரும்பாத இளைய மகன் ஒளரங்கஜீப் திடீரெனத் தம் தந்தையை ஆக்ரா கோட்டையில் சிறை வைத்து தம்மை அரசராக அறி வித்து முடிசூடிக்கொண்டார். ஆக்ரா கோட்டையில் சகல வசதிகளோடும் தம் தந்தை ஷாஜஹானை ஒய்வாக வாழச்செய்தார் ஒளரங்கசீப், திடீ ரென நோய் வாய்ப்பட்ட ஷாஜஹான் தம் மனைவியின் கப்ர் உள்ள தாஜ் மஹலைப் பார்த்தபடியே காலமா னார். அவரது உடல் தாஜ்மஹல் கட்டிடத்திலுள்ள அவரது மனைவியின் கப்ர் அருகிலேயே நல்லடக்கம் செய் யப்பட்டது.

ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம்: நம் நாட்டின் மாபெரும் இறைநேசச் செல்வர்களில் மிக முக்கியமானவர் ஷாஹா ல் ஹமீது பாதுஷா நாயகமா வார். நாகூர் நாயகம் எனப் போற்றப் படும் இவர் வட இந்தியாவில் உள்ள

மாணிக்கப்பூரில் கி. பி. 1513ஆம் ஆண்டில் (ஹிஜ்ரி 919) ரபீஉல் அவ்வல் 10ஆம் நாள் பிறந்தார்.

இவர் தந்தையார் ஹஸன் குத் தாஸ், இமாம் ஹலன் (ரலி) வம்சா வழியை யும் தாயார் ஸையிதா ஃபாத்திமா, இமாம் ஹாஸைன் (ரலி) வம்சா வழி யையும் சார்ந்தவர்களாவர். மாபெரும்

ஷாஹ-ல் ஹமீது பாதுஷா நாயகம்

சிறப்புக்குரிய பாரம்பரிய வழி வந்த ஷாஹூல் ஹமீது பாதுஷா அவர்கள் இஸ்லாமிய ஞான நூல்களை முறைப் படிக் கற்றுத்தேர்ந்தார். மெய்ஞ்ஞான இறைவழியில் பேரார்வம் கொண்டார்.

இவரது ஞான வேட்கைக்கு ஏற்ற ஞா ன குருவாக முஹம்மது கெளது குவாலியர் (ரஹ்) அமைந்தார். அவர் தந்த மெய்ஞ்ஞானப் பயிற்சி இவரை ஞானச் சுடராக ஒளிரச் செய்தது. அவரது ஆலோசனையின் பேரில் அவ ரது நல்லாசியுடன் தம் ஆன்மீக மாண வர் கூட்டத்துடன் உலகின் பல பகுதி களுக்கும் சென்று இஸ்லாமிய இறை

ஞானத்தைப் ப ர ப் பு ம் பணியில் முனைப்புடன் ஈடுபட்டார்.

முதலில் புனித மக்க மாநகர்

சென்று, தம் ஹஜ் கடமையை நிறை

வேற்றினார். மதீனா சென்று பெரு மானார் அடக்கவிடத்தில் ஜியாரத்

செய்து ஸ்லாம் உரைத்தார். பின்னர் பல ஆண்டுகள், அரேபியா நாடெங்கும் பயண செய்து, மார்க்க ஞானச் செல் வர்களையும் புனிதத் தலங்களையும் கண்டார். மக்களிடையே மெய்ஞ் ஞானத்தைப் பரப்பினார். இறுதியில் துருக்கி நாட்டின் தலைநகரான இஸ் தம்புல் சென்றார். அங்கு சுல்தானின் உபசரிப்பில் சில நாட்கள் இருந்துவிட்டு,

பக்தாது நோக்கிப் பயணமானார்.

அங்கு அடக்கமாகியுள்ள மெய்ஞ் ஞானத் தலைவர் முஹிய்யுத்தின் ஆண் டகையின் அடக்கவிடம் சென்று ஜியா ரத் செய்து ஸ்லாம் கூறினார். அதற்கு கெளதுல் அஃலத்தின் பதில் ஸ்லாம் வெளிப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின் ஜித்தாவிலிருந்து கப்பலேறி கேரள மேலைக் கடற்கரை ஊரான பொன்னானி வந்தடைந்தார். சிறிது காலம் அங்கே தங்கிவிட்டு மாலத்தீவு,

இலங்கைத் தீவுக்குச் சென்றார். ஆதம்