பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 70

ஹஜ் கடமை அனைத்து முஸ்லிம் களாலும் கடைப்பிடிக்கப்படவேண்டிய கடமை ஆகும். நல்ல உடல் நலமுள்ள வயதுவந்த, அறிவுத்தெளிவும், சுயமாக இயங்கும் வல்லமையும், தேவையான வருவாயும் உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயமாக நிறைவேற்றப்பட வேண் டிய இன்றியமையாக் கடமையாக விதிக்கப்பட்டுள்ளது. ஆண், பெண் இருசாராரும் தம்வாழ்நாளில் ஒருமுறை யேனும் ஹஜ் செல்வது அவசியமாகும்.

ஹஜ் செல்வோர் தம் மனைவி மக் கள், மற்றும் தங்கள் வாழ்க்கைத் தேவைக்காகத் தம்மை நம்பியிருக்கும் பணியாளர்கள், உறவினர்கள் ஆகி யோர் தான் ஹஜ் செய்யும் காலத்தில் இடரின்றி வாழ அனைத்து வசதிகளை யும் செவ்வனே செய்து முடித்த பின் னரே ஹஜ் பயணம் மேற்கொள்வது அவசியமாகும். நல்ல பொருள் வசதி யும் வாய்ப்பும் உள்ளவர்கட்கு ஹஜ்

கட்டாயக் கடமையாகும். ஹஜ் கட மையை நிறைவேற்றும் ஹாஜிகளின்

அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னிக்கிறான். அவருக்குச் சொர்க்கப் பேறு கிட்டுகிறது.

வேற்றிடங்களிலிருந்து உம்ரா அல் லது ஹஜ் பயணம் மேற்கொள்வோர் மக்காவுக்கு அப்பால் ஒரு குறிப்பிட்ட எல்லையிலிருந்து இஹ்ராம் உடை உடுத்திக் கொள்ளவேண்டும். தைக்கப் படாத இரு துண்டுகளை ஆடையாக வும் போர்வையாகவும் அணிவதோடு நற்சிந்தனையோடும் நற்செயல்களோ டும் இருக்கவேண்டும். இஹ்ராம் உடையில் இருப்போர் முஹ்ரிம் என்று அழைக்கப்படுவர்.

கஃபாவிற்குள் பாபுஸ்ஸலாம் நுழை வாயில் வழியாக ஹறம் ஷரீஃப் வந்து சேர வேண்டும். ஹஜருல் அஸ்வத் கருநிறக்கல்லைத் தொடக்கவிடமாகக்

கொண்டு ஏழுமுறை தவாஃப் சுற்ற வேண்டும். தவாஃப் சுற்றி முடிந்த பின்னர் வாஜிபுத் தவாஃப்'தொழுகை யை இரண்டு ரகஅத் தொழவேண்டும். அதன்பின்னர் ஜம்ஜம் கிணற்று நீரைப் பருக வேண்டும். அன்றே ஸ்பா, மர்வா ஸயீயை முடிக்க விரும்பினால் அன்றே செய்யலாம். இன்றேல் துல்ஹஜ் பத் தாம் நாளன்று செய்துகொள்ளலாம். லயீ முடித்தவர்கள் ஆண்கள் தலை முடியை இறக்க வேண்டும். பெண்கள் தங்கள் தலைமயிரின் கொத்து முடியை குறைந்த பட்சம் ஒரங்குல நீளம் கத் தரித்துக் கொண்டால் போதும். அதன் பின் இஹ்ராம் உடையைக் களைந்து விடலாம்.

மக்காவில் தங்கி ஹஜ் செய்வோர் துல்ஹஜ் ஏழாம் நாள் அஸ்ருக்குப் பின் எட்டாம் நாள் ஸாப் ஹாக்கு முன் முறைப்படி இஹ்ராம் உடை அணிந்து கொள்ளவேண்டும்.

துல்ஹஜ் எட்டாம் நாளன்றுபொழுது விடிந்த பின் மக்காவிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள மினா செல்லவேண்டும். இங்குள்ள மஸ்ஜிதுல் கைஃப் பள்ளிவாசலுக்கருகில் தங்கு வது சிறப்பு, மினாவில் எட்டாவது நாளை முழுமையாகக்கழிக்கவேண்டும். இங்கு ளு ஹர், அஸர், மஃரிப், இஷா தொழுகைகளைத் தொழவேண்டும்.

அடுத்துவரும் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் வைகறையில் பஜ்ரு தொழுகையை முடித்து வெயில் படர்ந்த பின் தல்பியா ஓதியபடி மினாவிலிருந்து புறப்பட்டு அரஃபாத் பெருவெளி சென்றடைய வேண்டும். இப்பெருவெளியில் எங்கு வேண்டுமானாலும் தங்கிக் கொள்ள லாம். ஆயினும், இயன்றவரை ஜபலுர் ரஹ்மத்தி'ற்கு அருகாகத் தங்குவது சிறப்பாகும். அங்கே தங்கும் நேரத்