பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹிஜ்ரி

83 ஆண்களும் 18 பெண்களும் அடங் கிய முஸ்லிம் குழுவொன்று அபிஸினி யாவுக்கு ஹிஜ்ரத் சென்றது. பின்னர் குறைஷியர்களின் கொடுமை உச்சக் கட்டமானபோது முஸ்லிம்களை யத்ரி புக்கு (மதீனா ஹிஜ்ரத் செல்லுமாறு பெருமானார் கூறினார். அவ்வாறே முஸ்லிம்கள் ஹிஜ்ரத் சென்றனர்.

தாம் ஹிஜ்ரத் செல்ல இறை ஆணையை எதிர்நோக்கிக் காத்திருந்

தார் பெருமானார் அவர்கள். அண்ண லார் எதிர்பார்த்தவாறே யத்ரிபுக்கு ஹிஜ்ரத் செல்ல கனவுமூலம் இறை யாணை பிறந்தது, அதற்கொப்ப அபூ

பக்ர் (ரலி) அவர்களை உடன் அழைத்

துக்கொண்டு யத்ரிபுக்கு (மதீனா) ஹிஜ்ரத் புறப்பட்டார். பின்னர்,

பெருமானாரைப் பின்பற்றி முஸ்லிம் கள் பலரும் யத்ரிபுக்கு ஹிஜ்ரத் செய் தனர். இவ்வாறு ஹிஜ்ரத் செய்தவர் கள் 'முஹாஜிர் என அழைக்கப்பட்ட னர். ஹிஜ்ரத்துக்குப் பின்பே இஸ்லாம் வலுவோடு வளர்ந்தது என்பது வர லாறு.

ழ்ரி: ஹிஜ்ரத் என்ற சொல்லினம்

3. [. & f 3.

யாகப் பிறந்ததே 'ஹிஜ்ரி என்ற சொல். இஸ்லாமிய ஆண்டு ஹிஜ்ரி

என அழைக்கப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக் காவிலிருந்து மதீனா நோக்கி ஹிஜ்ரத் சென்ற நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததாகும்.

இஸ்லாம் நிலை பெறுவதற்கு முன்பே

அராபியர்கள் பல்வேறு ஆண்டுக் கணக்குகளைக் கைக் கொண்டிருந் தனர். அவை அவர்களின் சமுதாய

வாழ்வில் ஏற்பட்ட பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளை ஆதாரமாகக் கொண்டி ருந்தன. அவை அமைதி ஆண்டு', 'நில

175

அசைவு ஆண்டு', 'யானை ஆண்டு' எனப் பல்வேறு ஆண்டுக் கணக்குகளைக் கொண்டதாகும். இத்தனை ஆண்டுக் க ண க் கு க ள் அராபியர்களிடையே வழங்கி வந்த போதிலும், இஸ்லாமிய ருக்கென்று தனியே ஒரு ஆண்டுக் கணக்கு இருக்கவேண்டிய அவசிய அவ

சரத் தேவை ஏற்பட்டது.

உமர் (ரலி) இரண்டாவது கலீஃபா வாக இருந்தபோது ஒரு குறிப்பை எழுதினார். அதில் ஷஃபான் மாதம் எனக் குறித்தார். பின்னர், ஒரு ஐயம். எந்த ஆண்டின் ஷஃபான் மாதம் என்ற கேள்வியும் எழுந்தது. எனவே, முஸ்லிம் களுக்கென தனி ஆண்டு முறை இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த னர். இதை அழுத்தமாக உணரும் வகையில் வேறொரு சந்தர்ப்பமும் ஏற் பட்டது. கலிஃபா உமர் (ரலி) அவர் கள் அடிக்கடி பல்வேறு மாநில ஆளுநர் கட்குக் கடிதம் எழுத வேண்டிய அவ சிய அவசரத் தேவை ஏற்பட்டது. அக்கடிதங்களில் தேதி ஏதும் குறிப் பிடாததால் ஆளுநர்கட்குக் குழப்ப மேற்பட்டது. இக்குறையைப் போக்க புதிய இஸ்லாமிய ஆண்டை உருவாக்க முயற்சி மேற்கொள்ளலானார்.

(ரலி) தம்

so ... . . اسسس له نبيذ

இதைப் பற்றி உமர் தோழர்களிடம் ஆலோசனை டார். சிலர் பாரசீக ஆண்டைப் பின் பற்றி அமைக்கலாம் என்றனர். வேறு சிலர் பெருமானார் (ஸல்) அவர்களின் பிறந்த நாளையே இஸ்லாமிய ஆண் டின் தொடக்கமாகக் கொள்ளலாம் என்றனர். அவ்வாலோசனையில் கலந்து கொண்ட பெருமானாரின் மருகர் அலி (ரலி) அவர்கள் அண்ணல் நபிகள் நாய கம் (ஸல்) அவர்கள் மக்காவினின்றும் மதீனா சென்ற நாளிலிருந்து புதிய இஸ்லாமிய ஆண்டைத் துவங்கலாம் எனக் கூறினார். இந்த ஆலோசனையை