பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

நகரங்களில் மட்டுமே மக்கள் தொகை மிகுந்துள்ளது. மக்காவும், மதீனாவும் இஸ்லாமியப் புனித நகரங்களாகும். மக்கா நகரின் மத்தியில் கஃபா இறை யில்லமும், மதீனாவில் அண்ணலாரின் அடக்கத்தலமும் உள்ளன. ரியாத் அரே

பியாவின் தலைநகரமாகும்.

இந்நாட்டில் மழை அதிகம் பெய்வ தில்லை. இதனால் இந்நாடு வ றட்சி மிக்கதாகவும் பாலைவனப் பகுதியா கவும் காட்சியளிக்கின்றது. இந்நாட் டின் சில பகுதிகள் வளமுள்ளதாக உள் இங்கு பகலில் வெயில் கடுமை அதே போன்று இர அரேபியாவில்

. யாக இருக்கும். வில் குளிரும் உண்டு. பெட்ரோல் எண்ணெய் மிகுதியாகக் கிடைக்கிறது. இதனால் இ ந் ந டு செல்வ வளமிக்கதாக விளங்குகிறது.

அல்லாஹ் : அளவற்ற அன்புடையோ னும் நிகரற்ற அருளுடை யோனுமாகிய வல்ல இறைவனின் திருப்பெயரே அல் லாஹ்' என்பது.

இச்சொல் எம்மொழிச் சொல்லிலி ருந்தும் உருவானதல்ல, இறைவன் தன்னைக் குறிக்க வழங்கிய அழகுத் திருப்பெயராகும். இச்சொல் இனிமை யும் ஓசை நயமுமிக்க சொல்லாகும். அகிலம் தோன்றிய காலம் முதல் இறை வனைக் குறி க் க இறையடியார்கள் பயன்படுத்திவந்த சொல் என்பது ஆய் வாளர்கள் முடிவு. பெருமானார் (ஸல்) அவர்களால் இஸ்லாம் நிலை நிறுத்தப் பட்டபிறகு இச்சொல் முஸ்லிம் மக்கள் அனைவரின் தாரக மந்திரமாகியது.

பெருமானார் அவர்கள் தோன்று வதற்கு முன்பு அரேபியர்கள் உருவ வணக்கம் செய்து வந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் க ள் அனைத்துத் தெய்வங்களுக்கும் பெய ரிட்டிருந்தார்கள். எந்தத் தெய்வத்

அலாவுத்தின் கில்ஜி

தையும் அல்லாஹ்' எனப் பெயரிட்டு அழைக்கவில்லை. எல்லாத் தெய்வங் களுக்கும் மேலான உருவிலா அருவ மான இறைச் சக்தியையே அல்லாஹ்' என்ற பெயரால் அழைத்து வந்தார் கள்.

வணங்குதற்குரியோன் அ ல் லா ஹ் ஒருவனைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதை நாயகம் (ஸல்) வலி யுறுத்தி பல .ெ த ய் வ. உ. ரு வ வழி பாட்டை ஒழித் தார். அல்லாஹ்" யாருக்கும் இணை இல்லாதவன். யாரு டைய துணையும் இல்லாதவன். அவன் யாரையும் பெறவும் இல்லை, அவன்

யாராலும் பெறப்படவும் இல்லை. அவன் ஆணும் இல்லை. பெண்ணும்

இல்லை. அலியும் இல்லை. அல்லாஹ் மனிதனின் பிடரி நரம்பைவிடவும் அரு கில் உள்ளான். நன்மை தீமைகளுக் கேற்பப் பலன் அளிப்பவன். அவன் அருளை, அன்பைவேண்டி நிற்போருக்கு அவன் இல்லை என்று சொல்லுவதே இல்லை. உலகைப் படைத்துக் காத்து வருபவன். அவன் இன்றி ஒர் அணுவும் அசையாது. அல்லாஹ் எனும் பெயரும் அல்லாஹ்வின் சிறப்பைக்கூறும் சொற் கள் திருக்குர்ஆனில் 2584 இடங்களில் வ ரு கி ன் ன. அல்லாஹ்' எனும் சொல்லை எந்த உலக மொழியிலும் முழுப் பொருளோடு மொழிபெயர்க்க முடியாது. அல்லாஹ்' எனும் இறை வனின் திருப்பெயரை இடையறாது உச்சரிக்கும் ஒருவர் மீது இறைவனின் அன்பும் அருளும் மழை எனப் பொழி யும் என்பது ஆன்றோர் வாக்கு.

அல்லாஹ் எனும் பெயரோடு இறை வனுக்கு மேலும் 99 அழகுத் திருப்

பெயர்கள் உண்டு.

அலாவுத்தீன் கில்ஜி: துரு க் கி யி ன் கில்ஜிப் பரம்பரையைச் சேர்ந்த இந் திய சுல்தான்கனில் புகழ்பெற்று விளங்