பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்னு ஸினா

நோயைக் குணப்படுத்துவதில் இவ ருக்கு இருந்த பேராற்றலைக் கண்டு வியந்த வயது முதிர்ந்த மருத்துவர்கள் கூட இவரிடம் மருத்துவம் ப ற் றி ய ஐயப்பாடுகளைக் கேட்டுத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் க ச ட டி ன ர். இப்னு nனா மருத்துவம் பற்றி அவர் களிடையே நுட்பமாக விளக்கும்போது பேராசிரியர் ஒருவரிடம் பாடங்கேட் கும் மாணவர்களைப் போன்று அவர் கள் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

இளமையிலேயே அறிவு வேட்கை மிக் கவராக விளங்கினார். பேரறிஞர்களின் தத்துவ மேதைளின் அறிவியல் வல்லு தர்களின் நூல்களைத் தேடிப் பிடித்துப் படிப்பது இவர் வழக்கம் தாம் படிக் கும் நூல்களின் அடிப்படையில் தீவிர மாகச் சிந்திப்பதைத் தம் வழக்கமாகக் கொண்டிருந்தார். கணிதத் தந்தை யூக்ளிட், தத்துவமேதை அரிஸ்டாட் டில், தனிப் பெரும் சிந்தனையாளர் து ற் களைத் திரும்பப் படிப்பதில் இவருக்கு ஆர்வம் அதிகமிருந்தது.

سمہ

i.} : 4 yo »». - : سم، اسم مبرم به :-v பிளேட்டோ போன்றவர்களின்

ஒரு சமயம் புகாரா மன்னர் நோய் வாய்ப்பட்டார். அரண்மனை மருத்து வர்கள் எவ்வளவோ முயன்றும் நோ

யைத் தீர்க்க முடியவில்லை. இறு தி யில் இப்னு லினா அழைத்து வரப்

புட்டார். இப்னு லினாவும் முனைப்

புடன் சிகிச்சை அளித்தார். விரைவி லேயே மன்னரின் நோயும் தீர்ந்தது.

இதன்மூலம் இவரது மருத்துவ ஆற்றல் நாடெங்கும் பரவியது. இவரால் நோ யினின்றும் பிழைத்தெழுந்த மன்னர் இவரை அரண்மனையிலேயே இருக்க வைத்தார். அரசரின் அரிய நூலகத் தைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி யும் வழங்கினார். அ ந் நூ ல கத் தி ல் இருந்த மருத்துவ அறிவியல் நூல்கள் உட்பட அனைத்துத்துறை நூல்களை யும் முனைப்புடன் கற்றுத் தேறினார்.

4 :

விரைவிலேயே புகாரா மன்னர் இ வ. ரைத் தம் நாட்டின் அமைச்சராகவும் ஆக்சிக் கொண்டார்.

இவரது மருத்துவப் புலமையையும் அறிவுத் தெளிவையும் அறிந்த மன்னர் கள் பலரும் இவரைத் தம் அவையில் வைத்துக் கொள்ள விரும்பினர். அவ் வகையில் இவர் குவாரிஸ்ம் நாட்டு மன் னர் அல் மாமுன் அரசவையில் இடம் பெற்றார். அங்கு மற்றுமொரு இஸ்லா மிய மாமேதையான அல்பிருனியும் இடம் பெற்றிருந்தார். அங்கு இவரைத் தம் அரசவையில் இருக்குமாறு செய்ய மஹ்முது கஸ்னவி என்னும் மன்னர் மிக வும் விரும்பினார். ஆனால் சுதந்திர வேட்கை டக்க இப்னு nனா மன்னர் களின் கூண்டுக்கிளியாக இருக்க விரும் பாமல் சுதந்திரமாக வாழ வி ரு ம் பி னார். அதற்கேற்பத் த ம் வா s விடத்தை இவர் மாற்றிக் கொண்டே இருந்தார். இக்காலகட்டத்தில் இவர் மருத்துவ நூல்களை எழுதலானார். நாள்தோறும் ஐம்பது பக்கம் வீதம் எழுதினார். அந்த நூலே புகழ் பெற்ற விஃபா' என்ற நூல்.

இவர் இஸ்பஹானில் இருந்தபோது அடிக்கடி அரசவையில் சொற்பொழிவு ஆற்றுவார். அவற்றின் அடிப்படையில் பிற்காலத்தில் உருவானதே அறிவியல் கலைக்களஞ்சியம்எனும்தொகுப்பு:நூல்.

தமது இறுதிக்காலத்தில் இஸ்பஹான் மன்னர் அலாவுத் தெளலாவின் அன் பாண அரவணைப்பில் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்தார். இவர்தம் மன்னருடன் ஹமதான் செல்லும்போது நோய்வாய்ப்பட்டார். இவர் உதவியா ளர்கள் இவர் கூறிய முறைப்படி இவ ருக்கு மருந்து தரத் தவறியதால் இவர் 1037 ஆம் ஆண்டில் காலமானார். இன் றும் ரஷ்யாவிலுள்ள அவரது அடக்க விடமான ஹமதானுக்கு மக்கள்சென்று வருகின்றனர்.