பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

нъ тутъ

உறவினர், அண்டை வீட்டார், நண்பர் கள், ஏழை எளியவர்களுக்குக் கொடுத்து விடுவர். அதன் தோலை மதரஸ்ாக் களுக்கோ அநாதை இல்லங்களுக்கோ

இனாமாக வழங்குவர்.

ஈமான் இது இறை நம்பிக்கையைக் குறிக்கும் அரபுச் சொல்லாகும். வல்ல இறைவனாகிய அல்லாஹ் அவனைத் தவிர்த்து வணங்குதற்குரிய வன் வேறு யாருமில்லை' என மனத் தால், நாவால், செயலால், உறுதிப் படுத்துவதே இறை நம்பிக்கையாகும். "லாஇலாஹ இல்லல்லாஹ அ'(வணக்கத் திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை) என்பதே ஈமா னின் மூலமாகும்.

ஈமான் கொண்டவர்கள் முஃமின் கள்'(இறை நம்பிக்கையாளர்கள்)என்று அழைக்கப்படுவார்கள். மூ ஃமீன் க ள் வணங்குதற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத் தூதர் ஆவா ர்'என்பதில் அழுத்தமான நம்பிக்கையும் செயல்பாடும் உள்ளவ 片

களாவர்.

ஈராக் முற்காலத்தில் மெசபடோ

i. g மியா என அழைக்கப்பட்ட நா டே இன்று ஈராக் என அழைக்கப்படு

கிறது. இந்நாடு தென்மேற்கு ஆசியா வில் உள்ளது. வடக்கே துருக்கியையும், கிழக்கே ஈரானையும், தெற்கே வளை குடாவையும், தென்மேற்கே சவூதி அரேபியா, ஜோர்டான் ஆகிய நாடு களையும் வடமேற்கே சிரியா நாட்டை யும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. இந்நாட்டின் பரப்பளவு 4,34,924 ச. கி. மீட்டர் ஆகும். இந்நாட்டின் மக்கள் தொகை சுமார் ஒன்றரைக் கோடி யாகும்.இவர்களில் 95 சதவிகிதத்தினர் முஸ்லிம்களாவர். இந்நாட்டின் தலை நகர் பக்தாது ஆகும். இந்நகர் புனித

- "; ஒருவனே,

& 9

நகர்களில் கிறது.

ஒன்றாகப் போற்றப்படு முற்காலத்தில் இந்நகரும், அதன் வடக்குக் கிழக்குப் பகுதிகளும் இணைந்த பரப்பு அஸ்லிரியா என்ற பெயரால் வழங்கப்பட்டது.

ஈராக் நாட்டில் கோடையில் கடும் வெப்பம் நிலவும், குளிர்காலத்தில் குளிர் அதிகமாக இருக்கும். இந்நாட் டில் மழை பெய்வது மிகவும் குறை வாகும். விவசாயம் பெரும்பாலும் ஆற்றுநீர்ப் பாசனத்தின் மூலமே நடை பெறுகிறது. இங்கு இரு பெரும் ஆறு கள் ஒடுகின்றன. ஒன்று திஜ்லா (Tigris) என்னும் ஆறு. மற்றொன்று புராத் (Eupirates) எனும் நதியாகும். திஜ்லா ஆறு துருக்கி நாட்டில் உற்பத்தியாகி, ஈராக் நாட்டில் பாய்ந்து வளமூட்டு கிறது. இது சுமார் 1850 கி.மீ. தூரம் ஒடுகிறது. புராத் நதி துருக்கியில் உற் பத்தியாகி சிரியா வழியாக ஈராக் நாட் டில் பாய்ந்தோடி நீர்வளம் தருகிறது. இதன் நீளம் சுமார் 2860 கி.மீ. ஆகும்.

இந்நாட்டின் முதன்மைத் தொழி லாக விளங்குவது விவசாயம் ஆகும். இங்கு பருத்தி, கோதுமை, பார்லி முத லிய விளைபொருள்களும் பேரிச்சம் பழ மும் அதிக அளவில் விளைவிக்கப்படுகின் றன. உலகில் கிடைக்கும் பேரிச்சம் பழங் களில் 80 சதவிகிதம் ஈராக்கில்தான்

கிடைக்கின்றன. இங்கு ஆடு, மாடு, ஒட்டகம் மிகுதியாக வளர்க்கப்படு

சிறப்பாக நடைபெறுகின்றன.

இந்நாட்டில் நடைபெறும் மற்றொரு .ெ ப ரு ந் .ெ த ா ழி ல் பெட்ரோலியத் தொழிலாகும். இங்குக் கிடைக்கும் பெட்ரோலிய எண்ணெய் பெரும் குழாய்கள் மூலம் மத்தியதரைக்கடல் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு உலகின் பல பகுதிகளுக்கு அனுப்பப்படு கின்றது. இந்நாட்டின் தலைநகரான பக்தாதில்தான் மெய்ஞ்ஞான மேதை