பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 ()

முஹிய்யுத்தின் அப்துல் காதர் ஜீலானி (ரஹ்) அவர்களின் அடக்கத்தலம் உள் ளது. இந்நாட்டின் தேசிய மொழி அரபியாகும்.

இஸ்லாமிய வரலாற்றோடு நீண்ட காலத் தொடர்புள்ளது ஈராக் நாடு. கி. பி. 656இல் கலீபாவாக இருந்த அலீ (ரலி) அவர்கள் ஈராக்கிலுள்ள கூஃபாவைத் தம் தலைநகராக ஆக்கிக் கொண்டார். உமைய்யாக்கள் காலத் தில் இந்நாட்டிலுள்ள திமிஷ்கு தலை நகராகியது. அப்பாளிய கலீபாக் களின் காலத்தில் பக்தாது தலை நகராக உருவாக்கப்பட்டது. ஹாரு னுர் ரஷீத், மாமூன் ஆகியோர் இங்கி ருந்து ஆட்சி செய்த புகழ் பெற்ற ஆட்சியாளர்கள் ஆவர். 1968 முதல் இந்நாடு புரட்சிக் கெளன்சில் மூலமாக குடியரசாகியுள்ளது. இந்நாட்டின் ஆற் றல்மிகு தலைவராக சத்தாம்ஹாசைன் என்பவர் விளங்கி வருகிறார்.

ஈரான் : தென்மேற்கு ஆசியாவில் உள்ள முக்கிய நாடாகும் ஈரான். இந் நாடு அண்மைக்காலம்வரை பாரசீகம் என அழைக்கப்பட்டது. கிழக்கே பாகிஸ்தானையும், அப்கானிஸ்தானை யும் வடக்கே சோவியத் ரஷ்யாவையும் மேற்கே ஈராக்கையும் துருக்கியையும், தெற்கே பாரசீக வளைகுடாவையும் எல்லைகளாகக் கொண்டு அமைந்துள் ளது. இது ஒரு இஸ்லாமியக் குடி யரசாகும். இந்நாடு 16,48,000 ச. கி. மீட்டர் பரப்பளவு உள்ளது. நாட்டின் மொத்த மக்கள் தொகை சுமார் நாலேகால் கோடியாகும். இவர்களில் 98 சதவிகிதத்தினர் முஸ்லிம்களாவர். இந்நாட்டின் தலைநகர் தெஹ்ரான்.

இந்நாடு மலைகளால் சூழப்பட்டுள் ளது. புகழ்பெற்ற மலைத்தொடர் *சக்தாஸ்' என்பதாகும். இதிலுள்ள

ஈரான்

'தமாவந்த்' மிக உயரமான எரிமலைச் சிகரமாகும். நாட்டின் பெரும்பகுதி பாலைவனமாகும். பாலைவனப்பகுதி களில் மக்கள் அதிகம் வாழ்வதில்லை. இந்நாட்டின் தென்பகுதி செழிப்பாக உள்ளது. அதேபோன்று வடக்கிலுள்ள காஸ்பியன் கடற்பகுதி தாழ்நிலமாக அமைந்துள்ளதால் வளமாக உள்ளது. காஸ்பியன் கடற்பகுதி உலகின் மிகப் பெரிய ஏரி போன்று அமைந்துள்ளது. இந்நாடு கோடைகாலத்தில் வெப்பம் மிகுந்து காணப்படும். குளிர்காலத்தில் குளிர் அதிகமாக இருக்கும்.

இந்நாட்டின் மிக முக்கியத் தொழி லாகப் பெட்ரோல் தொழில் அமைந் துள்ளது. பாரசீக வளைகுடாப் பகுதி யில் உள்ள குலிஸ்தான் சமவெளியில் மிகுந்த அளவில் பெட்ரோல் எடுக்கப் படுகிறது.

இந்நாட்டின் மற்றொரு முக்கியத் .ெ த ா ழி ல் வேளாண்மையாகும். கோதுமை, பார்லி, சர்க்கரை, பீட், பேரீச்சம் பழம், பருத்தி, தேயிலை, புகையிலை முதலியன விளைவிக்கப் படுகின்றன.

ஈரானிய மக்களில் 48 சதவிகிதத் தினர் மட்டுமே வீடுகளில் நகரங்களில் வாழ்கின்றனர். மற்றையோர் அடிக் கடி இடம்பெயரும் நாடோடிகளாய் வாழ்கின்றனர். ஆடு, மாடு, குதிரை, மேய்ப்பது இவர்களது முக்கிய வேலை. இடம் பெயரும்போது பாரம் சுமக்கக் கழுதை, குதிரைகளைப் பயன்படுத்து கின்றனர்.

இந்நாட்டின் மற்றொரு தொழில் கம்பள நெசவாகும். அன்று முதல் இன்று வரை பாரசீகக் கம்பளங்கள் புகழ் பெற்றவையாகும். பெட்ரோலி யம், கம்பளங்கள், தோல், பேரீச்சம்